Menu
Your Cart

மிளகு

மிளகு
-5 %
மிளகு
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கச்சிதம்.. கச்சிதம் என்று நாலாப்புறமும் ஜெபம் நடந்துகொண்டிருக்கும் காலத்தில், அளந்தெடுக்கப்பட்ட வாழ்வுக்கு மாறான கச்சிதமின்மையை அழகியலாக தன் நீர்ம வரிகளின் மூலம் வரித்துக் கொண்ட இக்கவிதைகளை படைத்திருக்கிறார் சந்திரா. மிளகுக்கொடிகளும் வெண்முகில்களுமாய் அலங்கரிக்கப்பட்ட குறிஞ்சித் திணையின் இயற்கை சாட்சியான ஓர் இளம்வாழ்வும் அதன் பாடுகளும், விட்டு வெளியேறுதலின் மூட்டமான திகைப்பும் நகங்கடித்தலும், பின் திரும்பிப்பார்க்கையில் பறிகொடுப்பதன் அரசியல் பிரக்ஞையும் பதட்டமும் ஆங்காரமும் என மலையைப் போலவே கரடுமுரடான, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த, சமகாலமும் கடந்தகாலமும் முயங்கும் ஒரு நீண்ட நாடகத்தை, கவிதைகளின் வழியே உருவாக்குகிறார். எலும்பும் தோலுமான மதிப்பீடுகள், நுகர்வு வெறி, பருவநிலை மாற்றம், நியான் விளக்குகளின் பெருக்கம் என்றாகிவிட்ட காலத்தில், ஒரு திக்குவாய் சிறுமியைப் போல நாம் மறந்ததையும் இழந்ததையும் நினைவூட்டி, நமக்கும் மலைக்கும் ஏன் நமக்கும் நமக்குமே கூட எவ்வளவு தொலைவு பாருங்கள் என்கின்றன இக்கவிதைகள். - வே. நி சூர்யா
Book Details
Book Title மிளகு (Milagu)
Author சந்திரா தங்கராஜ்
ISBN 9788194734017
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Nov 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category கவிதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இரவென்பது சந்திராவின் மொழி, சந்திராவுடையது. இறுக்கமும், வாசிப்பவரின் கவனத்தைச் சிதறவிடாமல் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் பாணி அவருக்கு வாய்த்திருக்கிறது. வர் அனுபவத்தை எழுதுகிறார். எல்லோரும் அனுபவத்தைத்தானே எழுதுகிறார்கள். ஆம் சரிதான்! தன் அனுபவத்தின் ராசியத்தை அவர் எழுதுகிறார். அதாவது. வாழ்வின் மேல் ..
₹379 ₹399