ஜாதியை அழித்தொழிக்கும் வழி
அம்பேத்கர்/B.R.Ambedkar (ஆசிரியர்)
Categories:
Translation | மொழிபெயர்ப்பு
₹170
- Year: 2018
- Page: 144
- Language: தமிழ்
- Publisher: கருப்புப் பிரதிகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முகமான சாவர்க்கரோடு புரட்சியாளர் அம்பத்கரின் உருவத்தை (கொள்கைகளை அல்ல) இணைத்து வாக்குப் பொறுக்கும் இந்துத்துவ சூழ்ச்சியும்; அம்பேத்கரின் ஆளுமையையும் அறிவையும் விடுதலைக் கோட்பாட்டையும் செரிக்க முடியாமல், அவரைத் திரிக்க் முயலும் பார்ப்பனியத்தின் சதியும் பேராபத்தானவை. வர்ணாஸ்ரம தர்மத்தை சீர்குலைத்த பேராசான் புத்தரை 'விஷ்ணுவின் அவதாரமாக்கியதை' போன்ற அயோக்கியத் தனத்தையே இவ்விரு செயல்திட்டங்களும் தம் இலக்காகக் கொண்டிருக்கின்றன. ஜாதி நஞ்சை முறிப்பதற்கான ஆய்வின் செம்மாந்த வெளிப்பாடுதான் 'ஜாதியை அழித்தொழிக்கும் வழி' நூல். ஜாதியைக் கொல்ல இந்து மதத்தைக் கொன்றாக வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் ஆய்வின் கரு. ஆனால் இந்நூலின் பின்னிணைப்பில் உள்ள அம்பேத்கர்-காந்தி உரையாடலையே இந்நூலின் முதன்மைக் கருத்தாகத் திசை திருப்பி இந்துமத எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்திருக்கிறார்கள். பார்ப்பனர்களின் இத்தகைய திரிபுவாதம் தலித் மக்களை இந்துமயமாக்கும் சூழ்ச்சிக்குப் பயன்படுமா? அல்லது அம்பேத்கரியலை வளர்த்தெடுக்கப் பயன்படுமா? இந்நூல் குறித்து எண்பது ஆண்டுகளாக மயான அமைதி காத்த பார்ப்பன ஆளும் வகுப்பினர், திடீரென்று இதற்கு முன்னுரையும் பொழிப்புரையும் எழுத வேண்டிய தேவை என்ன? அருண்ஷோரி, ஜெயமோகன் வகையறாக்கள் அம்பேத்கரை அவதூறு செய்கிறார்கள் எனில் இடதுசாரி, முற்போக்கு முகமூடியுடன் அருந்ததி ராய்கள் திரிபுவாதம் செய்கிறார்கள். ஆங்கிலத்திலும் தமிழிலும் அதை வெளியிட அவர்கள் தேர்வுசெய்த இடமும் அதை உறுதி செய்கிறது. இந்துமத எதிர்ப்பைத் தம் வாழ்வியலாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பவுத்தம் என்ற பகுத்தறிவுப் பண்பாட்டை ஒடுக்கப்பட்ட மக்களின் தாய்ப்பாலாக்கிய அம்பேத்கரை திரிபுவாதத்திற்கு உட்படுத்த தலித் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தவே அம்பேத்கர் பவுத்தம் தழுவிய அறுபது ஆண்டுகளில் இந்நூல் நான்காம் பதிப்பாக வெளிவருகிறது.
தன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து
உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல் எழுப்பினால்,
அக்குரல் ஒடுக்கப்பட்டுவிடுகிறது என உரை எழுதப்பட்ட 78 ஆண்டுகளுக்குப்
பின்னரும்கூட எவராலும் மறுக்கப்பட முடியாத கருத்தாழம் மிக்க வாசகங்கள்
இந்நூலில் நிரம்பியுள்ளன.
Book Details | |
Book Title | ஜாதியை அழித்தொழிக்கும் வழி (Jaathiyai Azhiththozhikkum Vazhi) |
Author | அம்பேத்கர்/B.R.Ambedkar |
Publisher | கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal) |
Pages | 144 |
Year | 2018 |
Category | Translation | மொழிபெயர்ப்பு |