
-5 %
Out of Print
புத்தரும் அவர் தம்மமும்
₹523
₹550
- Edition: 5
- Year: 2020
- Page: 502
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: பேராசிரியர் பெரியார்தாசன் நினைவகம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய மக்களின் சில பிரிவினரிடம் பவுத்தத்தின்பால் ஏற்பட்டுள்ள அக்கறையின் அளவு வளர்ச்சியுற்று வருவதற்கான அடையாளங்கள் அறியும்படியாக உள்ளன. அதனோடு இயல் பாகவே புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றிய தெளிவான முரணற்ற விபரங்களுக்கான தேவையும் வளர்ந்து வந்துள்ளது.
பவுத்தரல்லாத யாருக்கும் புத்தரின் வாழ்க்கையையும் போதனைகளையும் தெளிவுற முரணல்லாத வகையில் முழுமையாய் எடுத்துரைப்பது மிகவும் கடினமான பணியாகவே உள்ளது. நிகாயங்களை அடிப்படையாகக் கொண்டு புத்தரின் வாழ்க்கையை முரணின்றி வெளிப்படுத்துவது மட்டுமின்றி அவருடைய போதனை களின் சில பகுதிகளை வெளிப்படுத்துவதும் மிகக் கடினமான பணியாகி விடுகிறது. உண்மையில் உலகிலுள்ள சமயங்களை நிறுவியவர்கள் அனைவரிலும், பவுத்தம் நிறுவியவரின் வாழ்க்கை யையும் போதனைகளையும் வெளிப்படுத்துவது ஏற்படுத்தும் பிரச்சினைகள் குதர்க்கமாக இல்லையெனினும், முற்றிலும் குழப்ப மானதாக உள்ளது என்று கூறுவது மிகையாகாது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் பவுத்தத்தைப் புரிந்து கொள்ளும் பாதையைத் தெளிவுபடுத்திக் கொள்வதும் அவசியமில்லையா? பவுத்தர்களாயிருப்பவர்கள் இந்தப் பிரச்சினைகளை பொது விவாதத்திற்கேனும் எடுத்துக் கொண்டு இப்பிரச்சினைகளின் மீது என்ன தெளிவைப் பெற முடியுமென்று யோசிக்க வேண்டிய தருணமல்லவா இது?
Book Details | |
Book Title | புத்தரும் அவர் தம்மமும் (Buddharum avar thammamum) |
Author | அம்பேத்கர்/B.R.Ambedkar |
Translator | பேராசிரியர் பெரியார்தாசன் |
Publisher | பேராசிரியர் பெரியார்தாசன் நினைவகம் (Prof. Periyardhasan Ninaivagam) |
Pages | 502 |
Year | 2020 |
Edition | 5 |
Format | Hard Bound |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி |