Menu
Your Cart

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் 1)

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் 1)
-5 % Out Of Stock
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் 1)
₹219
₹230
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தீர்க்க முடியாத சிக்கல்களுக்குள் புதைந்துவிடும்போது, வேறு வழியின்றி இறையருளை நாடுகிறது மனம். போட்டிகளும் அவசரமும் நிறைந்த யுகம் இது. இந்தக் காரணங்களாலேயே அநேக பிரச்னைகளையும் பலர் எதிர்கொள்ள நேர்கிறது. தனிப்பட்ட முயற்சிகளோடு தெய்வ சக்தியும் இணைந்தால், பிரச்னைகளிலிருந்து எளிதில் மீள முடியும். அதற்கு வழிகாட்டும்விதமாக ‘தினகரன் ஆன்மிக மலரில்’ வெளியாகி, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற பகுதி, அதன்பின் நூல் வடிவம் பெற்றது. என்ன பிரச்னைக்கு எந்தக் கோயிலில் வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என நம் மண்ணில் வாழ்ந்த சித்தர்கள் பலரும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்த சித்தர்களின் வாக்கை அனைவரும் புரிந்து பயன்பெறும் வகையில் எளிய நடையில் விவரிக்கிறது இந்த நூல். ‘முப்பத்தாறு பௌர்ணமிகளில் திருவண்ணாமலை கிரிவலம் செய்தால் திருமணத் தடை விலகும்’ என்கிறார் காகபுஜண்டர். ‘திருவாரூர் கமலாலயக் குளத்தில் நீராடி கமலாம்பாளை வணங்கினால் இதயக் கோளாறுகள் நீங்கும்’ என்கிறார் சிவ வாக்கியர். ‘பதினெட்டு பௌர்ணமிகளில் விரதம் இருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயியைத் தொழுதால் கல்வியில் சிறக்கலாம்’ என்கிறார் அகத்தியர். ‘திருநாவலூர் பக்த ஜனேஸ்வரரை துதித்தால் கடன் தொல்லை தீரும்’ என்கிறார் குதம்பை சித்தர். இப்படி இந்த நூல் ஏராளமான கோயில்களை புதிய பரிமாணத்தில் உங்களுக்குக் காட்டுகிறது. அறிமுகமான வேகத்திலேயே நூற்றுக்கணக்கான பிரதிகள் விற்று, விற்பனையில் சாதனை புரிந்த நூல் இது.
Book Details
Book Title சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் 1) (chikkalkal theerka sitharkal vazikal)
Author கே.சுப்பிரமணியம்
ISBN 978-93-85118-20-3
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 272
Year 2018
Edition 1
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha