-5 %
சங்க இலக்கியத்தில் சமயங்கலூம் மெய்யியல் கூறுகளும்
முனைவர் மு.ரமேசு (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2021
- ISBN: 702874500951
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழறம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சமய மெய்யியல்கள் பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் ஆகிய இரண்டு அடிப்படைகளை உடையன. இவற்றுள் ஒன்று உலகு பற்றியது; மற்றொன்று இவ்வுலகை கடந்த அதாவது உலகிற்கு அப்பாற்பட்ட ஒன்று பற்றியதாகும். இவ்விரு மரபுக்களுக்குள்ளும் பலவிதமான குழுக்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் செயல்பட்டன. ஒவ்வொரு குழுவும் தான்கொண்ட மெய்யியலை நுட்பமான வேறுபாட்டுடன் முன்வைத்தன. இவ்வகையான முயற்சியில் சமயங்கள் நிறுவனத் தன்மையையும் அடைந்தன.
உலகாயிதம், ஆசீவகம், புத்தம், சமணம், சாங்கியம், யோகம், மீமாம்சம், வைசேஷிகம், நியாய வைசேஷிகம், வைணவம், சைவம் என்று பலதரப்பட்ட சிந்தனைப்பள்ளிகள் பண்டைக் காலத்தில் இருந்தன; எனினும் உலகாயிதம், ஆசீவகம், புத்தம், சமணம், வைணவம், சைவம் ஆகிய சமய மெய்யியல் கூறுகள் சங்கச்செய்யுள்களில் காணப்படுகின்றன.
சங்க இலக்கியம் சமய சார்பற்ற இலக்கியம் என்கிற கருத்து ஆய்வு உலகில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன்பொருள் குறிப்பிட்டதொரு சமயக் கருத்துக்கள் சங்க இலக்கியத்தில் மேலோங்கவில்லை என்பதாகப் புரிந்துகொள்ளவேண்டும். அரசர்கள் சூழலுக்குத்தக்க சமய மெய்யியலாளர்களை ஆதரித்தனர் என்ற காரணத்தால் சங்க இலக்கியத்தில் சமய மெய்யியல் சார்ந்த பன்மைக்குரலை கேட்க முடிகிறது. இதுவே சமய சார்பற்ற என்கிற பொதுமைத் தன்மையையும் ஏற்படுத்துகிறது.
Book Details | |
Book Title | சங்க இலக்கியத்தில் சமயங்கலூம் மெய்யியல் கூறுகளும் (Sanga Ilakkiyathil samayangalum meyyiyal kurugalum) |
Author | முனைவர் மு.ரமேசு |
Publisher | தமிழறம் பதிப்பகம் (Tamizharam Publications) |
Pages | 144 |
Published On | Oct 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Literature | இலக்கியம் |