Menu
Your Cart

சொல்லாததும் உண்மை

சொல்லாததும் உண்மை
-5 %
சொல்லாததும் உண்மை
த.செ.ஞானவேல் (ஆசிரியர்), பிரகாஷ் ராஜ் (ஆசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
என் வாழ்வில் நான் நேருக்கு நேர் சந்திச்ச உண்மைகளை அரிதாரம் பூசாமல் பேசியிருக்கேன். சில உண்மைகள், கரண்ட் கம்பியில் கைவெச்ச மாதிரி, என்னையே ’சுளீர்’னு திருப்பி அடிச்சிருக்கு.சில உண்மைகள், ஓவியன் கையில் கிடைத்த தூரிகை மாதிரி அற்புதமாகப் பதிவாகி இருக்கு. இரண்டும் வாழவேண்டிய அனுபவங்கள்தான். - பிரகாஷ்ராஜ் காலத்தை ஒரு புகைப்படமாக்கி, அதில் கண்ணீரையும் புன்னகையையும் உறைய வைப்பவனே உன்னதக் கலைஞன். அந்த உன்னதத்தை நோக்கி உயர்ந்துகொண்டே இருக்கிற கலைஞன் ‍ பிரகாஷ்ராஜ். கர்நாடகத்தின் நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்தவர். வாழ்க்கை தரும் வலிகளையே உளிகளாக்கி, தன்னைத்தானே செதுக்கி எழுந்து வந்ததால், இன்று தென்னிந்தியா கொண்டாடுகிற திரைப்படக் கலைஞன். பரபரப்பான நடிகர், புதியன தேடும் தயாரிப்பாளர் என்பது ஒரு பக்கம், சிந்தனையில் சிறகு கட்டும் ரசனைக்காரர், இலக்கிய ஆர்வலர் என்பது இதமான மறுபக்கம். தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னுமின்னும் தீராத தேடலுமாக, சமூகத்தின் சகல திசைகளையும் தரிசித்த, தரிசிக்கத் துடிக்கிற மனசுதான் அவரது அடையாளம். நடந்த பாதையை, கடந்த பயணத்தை, நம்மை நண்பர்களாக்கி பிரகாஷ்ராஜ் பகிர்ந்துகொண்டதே இந்த சொல்லாததும் உண்மை! அதிர வைத்து, நெகிழ வைத்து நிர்வாணமாகி நிற்கும் உண்மைகள்! உலகமெலாம் நிறைந்து கிடப்பதும், உலகமே தேடிக் கொண்டிருப்பதுவும் ஒன்றுதானே... அது உண்மைதானே! ஆனந்த விகடனின் வெற்றித் தொடர்களில் ஒன்றான இது புத்தக வடிவில் ...
Book Details
Book Title சொல்லாததும் உண்மை (Sollathathum unmai)
Author பிரகாஷ் ராஜ், த.செ.ஞானவேல்
ISBN 97893845986903
Publisher வம்சி பதிப்பகம் (Vamsi)
Pages 280
Year 2020
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழில் வெவ்வேறு துறைகளில் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்த, தாம் பேசிய நம்பிக்கைகளில் தம்முடைய வாழ்க்கையைப் பணயம் வைத்த ஒரு தலைமுறை ஆளுமைகளின் குரல்களைச் சொல்லும் ஆவணமாகவும் இது ஆகியிருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் தரும் செய்திகள் நிறைய இந்நூலில் இருக்கின்றன. ஆனந்த விகடனில் தொடராக வ..
₹266 ₹280