-5 %
லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்
இன்பா (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தஞ்சாவூரில் பிறந்து சிங்கப்பூரில் வசித்துவருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறுகதைத்
தொகுப்பும் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர்ப்பெண்களின் கவிதைகள் மற்றும் சிற்றிலக்கிய வலையுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்களை
வெளியிட்டுள்ளார். அயலகத் தமிழ்க் கவிதைநூலுக்கான தமிழக அரசு விருது, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் கரிகாற்சோழன் விருது, ழகரம் பதிப்பகத்தின் கவிதை நூல் பரிசு,
கவிமாலையின் கவிதை நூல் பரிசு ஆகியவற்றோடு தேசியக் கலைகள் மன்றத்தின் தங்கமுனை முதல்
பரிசும் பெற்றுள்ளார். தகவல் தொழில்நுட்ப திட்டமேலாளராகப் பணியிலிருக்கும் இவர் சிங்கப்பூர்
கவிமாலையின் தலைவராகப் பொறுப்பிலிருக்கிறார்.
அகத்தில் உள்ள தேசம் புறத்தில் உள்ள தேசத்தோடு நடத்தும் ஊடாடலும் உரையாடலும்தான் இன்பாவின் கவிதைகள். பெரும்பாலும் புலம்பெயர்ந்தவர்களே சேர்ந்து உருவாக்கிய சிங்கப்பூர் என்ற
தேசத்தின் எல்லைகளும் வரையறைகளும் பெருமூச்சுகளும் சின்னங்களும் இப்படித்தான் இன்பாவின் கவிதைகளில் இயல்பாகத்தோன்றிவிடுகின்றன. ஒரு குட்டி தேசத்தில், அங்குள்ஈரச்சந்தையில்
சந்திக்கும் பல்லுயிர்களையும் தன் பெரும் கூடையில் சேகரித்துக் கொண்டே, தேசிய கவியாக உருவாவது எளிதுபோல. பாரதிதாசன் மரபில் கிளைத்து ஒருவர் நவீன கவிதையின் புதிய சாத்தியங்களுக்குத் தகவமைக்க முடியும் என்ற நம்பிக்கையான செய்தியை இன்பாவின் கவிதைகள் எனக்குத் தந்திருக்கின்றன.
Book Details | |
Book Title | லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள் (layaang-layaang-kuruvigalin-keechcholigal) |
Author | இன்பா |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Published On | Jan 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |