-5 %
தேவியின் தேசம்
சா.ராம்குமார் (ஆசிரியர்)
₹162
₹170
- Edition: 1
- Year: 2021
- Page: 152
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழினி வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனிதஇனம் தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருக்கிறது. புதுமையை நோக்கிய பயணத்தை கனவுகள் தான் வழிநடத்துகின்றன. சில நேரங்களில் தொலைதூரப் பயணங்களை வீரதீரசாகசங்களும் அலங்கரிப்பதுண்டு. அந்த வகையில் தமிழர்களின் கடல் வழி வணிகம் வரலாற்றின் பக்கங்களில் பெருமிதத்தோடு இடம்பெற்றுள்ளதக் காண முடிகிறது. அதேபோல் அந்நிய பண்பாட்டின் தாக்கம் இந்திய மனங்களை ஊடுருவி நிலைத்து நிற்பதும் ஆழமான ஆய்வுக்குரியவை. கடந்த எழுபது ஆண்டுகளில் உலகஅரங்கில் நிலவிய பனிப்போர் இந்திய நடைமுறைகளையும் பாதித்தது என்றே சொல்ல வேண்டும். வழவழப்பான காகிதங்களுடன் கூடிய சோவியத் புத்தகங்கள் சென்ற தலைமுறையின் காதல் என்றால் ஹாலிவுட் திரைப்படங்கள் வழியே இந்திய மனங்களைக் கவர்ந்திழுக்கும் அமெரிக்க மண்தான் நிகழ்கால புவியீர்ப்பு விசை. சோவியத் புத்தகங்களின் வழி வாசிப்பு அனுபவத்தைத் தொடங்கிய தலைமுறைக்கு அமெரிக்க மண்ணின் கவர்ச்சியைக் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல. தென் அமெரிக்க புரட்சியாளர்களின் பார்வையில், கிA+பப் போராட்டங்களின் திசை வழியில் அமெரிக்காவைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு பல நகைமுரண்களை உள்ளடக்கிய சமூகமாகவே வட அமெரிக்கா தென்படும். அந்த வகையில் நண்பர் ராம்குமார் எழுதியுள்ள ‘தேவியின் தேசம்’ என்னும் நூல் அமெரிக்கச் சமூகத்தின் நாடித்துடிப்பை உணர்ந்திட எடுக்கப்பட்டதோர் முயற்சி. பிட்ஸ்பர்க் நகர மேயர் அலுவலகம் இயங்கும் விதம் உலகெங்கும் அரசு இயந்திரத்தின் மனப்பான்மை ஒரே விதமாகத்தான் இருக்கிறதோ என்ற கேள்வியுடன் இந்தியச் சூழலிருந்து எப்படி அமெரிக்கா வேறுபடுகிறது எனச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர் அழகிய நூலகம் ஒருபுறம், அமெரிக்காவில் குறைந்து கொண்டே வரும் வாசிப்புப் பழக்கம் மற்றும் எழுத்தறிவு ஒருபுறம், தூக்கிப் பிடிக்கப்படும் தனிமனித சுதந்திரம் ஒருபுறம், அமெரிக்கா மட்டுமின்றி உலகின் போக்கையே மாற்றக்கூடிய பெருவணிக நிறுவனங்களின் தலைமையகம் மறுபுறம் என பல்வேறு முரண்களின் கூட்டுத்தொகையாக அமெரிக்கச் சமூகம் இயங்கி வருவதை ஆங்காங்கே உணர்த்திச் செல்கிறது இந்நூல். திடீரென்று அதிகரிக்கும் ஒலியின் அளவைக் கொண்டு சட்டத்தை மீறி துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்க தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த முயலும் ஒரு சமூகம் துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஏன் தடை செய்யவோ அல்லது கட்டுக்குள் வைத்திடவோ முயலவில்லை என்ற கேள்வி முக்கியமானது. அமெரிக்கா புலம்பெயர்நதவர்களின் தேசம். பூர்வகுடிகளான செவ்விந்தியர்களும், அண்டை நாட்டு அகதிகளும் துன்பத்தில் உழல, இடையில் வந்தவர்கள் வானுயர வளர்ந்த கதை அது. செவ்விந்தியர்களின் அருங்காட்சியகத்தில் நிலவும் சோகம் கவிழும் அமைதியும், வெனிசூலா நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த பல்மருத்துவர் ஒருவர் மியாமி நகரில் துப்புரவுப் பணியை மேற்கொண்டிருப்பதும் வலி மிகுந்த நிகழ்வுகளே. இந்நூல் எழுப்பும் சில கேள்விகள் முக்கியமானவை அவற்றில் ஒன்று. மேற்கத்தியப் பண்பாட்டிற்கு ஆன்மிகம் தவிர கொடையளிக்க இந்தியாவிடம் வேறெதுவும் உள்ளதா என்ற கேள்வி ஆழ்ந்த ஆய்வுக்குரியது. ஓர் நல்ல நூல் வாசகரை பல கேள்விகள் கேட்டு உயிர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில் நண்பர் ராம்குமார் படைத்திட்ட இந்த நூல் சில முக்கியமான கேள்விகளை முன்வைக்கிறது. மேகாலயாவில் பணிபுரிந்து கொண்டே தமிழில் பயண இலக்கியம் படைத்திட முன்வந்தவருக்கு என் வாழ்த்துகள்.
Book Details | |
Book Title | தேவியின் தேசம் (theviyin thesam) |
Author | சா.ராம்குமார் |
Publisher | தமிழினி வெளியீடு (Tamizhini Publications) |
Pages | 152 |
Published On | Feb 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு |