- Edition: 3
- Year: 2015
- ISBN: 9788123409917
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இலக்கு 2020
ஒவ்வொரு இந்தியனும் முக்கியமாக இந்த நாட்டின் இளைஞன் ஒரு வித்தியாசமாக செயல்பட முடியும்.
“இலக்கு 2020” என்ற இந்த நூல், நாளய் இந்தியாவை வடிவமைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு வரைபடம். அவர்களின் இலக்கு, இந்தியாவை 2020 ஆம் ஆண்டு வாக்கில் வளர்ச்சியடைந்த நாடாகவும் உலகின் முதல் 5 பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாகவும் மாற்றுவதுதான். இந்த இலக்கு, யதார்த்தமற்ற ஒன்று அல்ல என்பதை தெளிவுபடுத்துவதற்கு டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துகல்கலாமும் ய.சு. ராஜனும் இந்தியாவின் பலத்தையும் பலவீனத்தையும் பரிசீலிக்கிறார்கள்.
ஊக்கமூட்டும் இந்தப் புத்தகம், இந்தியாவின் அறியப்படாத வெற்றிகள் பற்றிய கதைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புத்தகம் 21-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை விவாதிக்கிறது. தேசிய வாழ்க்கை பற்றிய வெவ்வேறு நோக்குகளையும் கவனிக்கிறது. மேலும் இந்தத்துறைகளில் ஒவ்வொன்றிலும் சாதனைகளையும் சவால்களையும் தெளிவாக விளக்குகிறது. இன்றைய இளைஞன் இந்த நாட்டுக்கு எந்த வழிகளில் வித்தியாசமாகச் செயல்படமுடியும் என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.
மிகச் சிறப்பாக விற்பனையான “இந்தியா 2020:புதிய ஆயிரமாண்டுக்கான தொலை நோக்கு” நூலின் மையக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது “இலக்கு 2020” என்ற இந்தப் புதிய நூல். இந்த நூலும் ஒரு வலுவான, வளமான நாட்டை வளர்ச்சியடையச் செய்வதற்கு அத்தியாவசியமான முக்கிய இலக்கு என்ற உணர்வைக் கொண்ட வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Book Details | |
Book Title | இலக்கு 2020 (Elakku 2020) |
Author | ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (A.B.J.Abdul Kalam) |
ISBN | 9788123409917 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 176 |
Year | 2015 |
Edition | 3 |
Format | Paper Back |