Menu
Your Cart

ஆலயம் தேடுவோம் (பாகம் 1)

ஆலயம் தேடுவோம் (பாகம் 1)
-4 % Out Of Stock
ஆலயம் தேடுவோம் (பாகம் 1)
பி.சுவாமிநாதன் (ஆசிரியர்)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆலயங்கள் நமது கலாசாரச் சின்னங்கள். பக்தியோடு பண்பாடும் வளர்த்த தலங்களவை. இறையும் கலையும் இணைந்த இடங்களவை. மனதின் மேன்மையை வலியுறுத்தும் மையங்களவை. தெய்வத்துக்கேற்பவும், வழிபடும் மக்களின் வசதிக்கேற்பவும் சிறியதும் பெரியதுமாக ஆலயங்கள் தமிழகமெங்கும் நிரம்பியுள்ளன. லட்சோப லட்சம் பக்தர்களின் கொடைகளினாலும் அரசாங்கத்தின் நிதி கிட்டியும் சில ஆலயங்கள், சிறப்பான பிராகாரங்களோடும், பொன், வெள்ளி என அலங்காரப்படுத்திய சிலைகளோடும் பிரகாசிக்கின்றன. அதேசமயம், பல ஆலயங்கள் கவனிப்பார் அற்று, வழிபாட்டுக்குரிய அடையாளம் தெரியாமல் பாழடைந்து கிடக்கின்றன. பெரும்பான்மை மக்களால் அறியப்படாத அத்தகைய ஆலயங்களைத் தேடிக் கண்டுபிடித்து 'சக்தி விகடன்' இதழ்கள் மூலமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார் பி.சுவாமிநாதன். அழியும் நிலையில் இருந்த ஆலயங்களின் ஆதிவரலாறு, அதன் புராணச் சிறப்புகள், அதில் வீற்றிருக்கும் தெய்வங்களின் மகிமை, வழிபடவேண்டிய முறைகள் போன்றவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு ஆலயத்தின் நுழைவாயிலுக்கும் அழைத்துச் செல்லும் நூலாசிரியர், அங்குள்ள பிராகாரங்கள், விக்கிரகங்கள், சிறுசி
Book Details
Book Title ஆலயம் தேடுவோம் (பாகம் 1) (Aalayam Theduvom Part 1)
Author பி.சுவாமிநாதன் (P.Swaminathan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha