-3 %
ஆளும் வர்க்கமாக அறிவு ஜீவிகள்
₹29
₹30
- Page: 54
- Language: தமிழ்
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
‘ஆளும் வர்க்கமாக அறிவுஜீவிகள்’ என்ற இச்சிறு நூல் சில முக்கியமான தகவல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆளும் வர்க்க அறிவுஜீவிகளாக இந்நூலாசிரியரால் வரையறுத்துக் கூறப்படும் அனைவரும் நம்மோடு அன்றாடம் தொடர்பு கொள்பவர்கள்தான். அவர்களில் நாமும் இருக்கிறோம் என்பதே உண்மை. அரசதிகாரம் தொடர்ச்சியாக தனக்கான ஆதரவு சக்திகளை பெருக்கிக் கொள்வதில் எவ்வாறு திட்டமிட்டுச் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை ஆதாரங்களோடு நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். இந்திய விடுதலைக்கு முன் ‘ஒயிட்காலர்’ என்றால் அரசு ஊழியர்கள் என்ற கருத்தாக்கமே இருந்தது. விடுதலைக்குப் பின்னர் அந்த வகை மனிதர்கள் அனைத்துத் துறைகளிலும் பெருகியுள்ளனர் என்பதும் அவர்களது நலனே அரசுத் திட்டங்களின் மூலம் செயலுக்கு வருகிறது என்பதும் சாதாரண மனிதர்கள்-பெரும்பாலான கிராமவாசிகள்-அறியாததாகும். மக்கள் நலன் என்றால், ‘எந்த மக்கள்’ என்ற கேள்விக்கு விடைதேடுவோருக்கு முக்கியத் தகவல்களைத் தருவதாகவே இச்சிறு நூலைக் கருதலாம். மார்க்சியர்களுக்கே உரிய நுண்ணுணர்வுடன் நூலாசிரியர் அசோக் ருத்ரா தமது கருத்துக்களை ஆதாரத்துடன் எடுத்தாள்கிறார். இந்தியச் சமூக யதார்த்தம் குறித்து கூருணர்ச்சி கொண்ட சில மார்க்சிய பொருளாதார வல்லுநர்களில் அசோக் ருத்ராவும் ஒருவர். சாந்தி நிகேதனிலுள்ள, விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தில் அவர் பேராசிரியர்.
Book Details | |
Book Title | ஆளும் வர்க்கமாக அறிவு ஜீவிகள் (Aalum Varkamaaga Arivu Jeevigal) |
Author | அசோக்ருத்ரா (Ashokruthra) |
Translator | வான்முகிலன் (Vaanmugilan) |
Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
Pages | 54 |
Published On | Nov 2008 |