Menu
Your Cart

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு
ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு
₹8,400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஃப்ரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியில் மொழிபெயர்ப்பாளராக இருந்த அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள், தற்காலிக வாசிப்புக்கு ஏற்ற வகையில் திருத்தப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன. சென்னையில் பிறந்த அனந்தரங்கம் பிள்ளை, புதுச்சேரியின் ஃபிரெஞ்சு ஆளுநராக த்யூப்ளே இருந்தபோது, 1746ல் தலைமை மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். 1756வரை அவர் அந்தப் பதவியில் இருந்துவந்தார். 1761ல் அவர் மரணமடையும்வரை, தொடர்ச்சியாக நாட்குறிப்பில் அன்றாட நிகழ்வுகளைப் பதிவுசெய்துவந்தார். 1736 செப்டம்பர் 6ஆம் தேதி முதல், அவர் மரணமடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, அதாவது 1761 ஜனவரி பத்தாம் தேதிவரை இந்த நாட்குறிப்புகளை சுமார் 25 ஆண்டுகளுக்கு அவர் தொடர்ச்சியாக பதிவுசெய்து வந்திருக்கிறார். அனந்தரங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்புகள் பல சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கியவை. 1755ல் லிஸ்பனில் நடந்த மிகப் பெரிய நிலநடுக்கம், ஆளுநர் துய்ப்ளேவின் பாதுகாவலர்களாக, வாட்டிகனில் பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள சுவிஸ் கார்டுகள் செயல்பட்டது, புதிய வாழ்வைத் தேடி புதுச்சேரிக்கு வந்த ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்கள் பற்றிய குறிப்புகள், துய்ப்ளேவின் துணைவியார் மதாம் துய்ப்ளேவுக்கும் அனந்தரங்கம் பிள்ளைக்கும் இடையிலான மோதல்கள், பிரஞ்சு அரசவைச் செய்திகள் ஆகியவை அவரது நாட்குறிப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
Book Details
Book Title ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு (Aanandha rangappillai avargalin dhinappadi sethi kurippu)
Author அ.வெண்ணிலா (A.Vennila), டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப (Taaktar Mu.Raajendhiran, I.Aa.Pa)
Publisher அகநி பதிப்பகம் (Agani Publications)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

டாக்டர் மு.ராஜேந்திரன் IAS, இந்நூலின் வழி எடுத்துரைத்துள்ள அறிய செய்திகள் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் புதிய பரிணாமத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. வரலாற்று அடிப்படையிலோ அல்லது ஆய்வின் அடிப்படையிலோ குற்றம் இல்லாத வகையில் திகழும் வரலாற்று நூல் இது. பயனுடைய நூல். - டாக்டர்.இரா நாகசாமி..
₹475 ₹500
உலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். திருக்குறளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கருத்துக்காளை ஆழ்ந்த புலமையுடன் ஆய்ந்து, தற்கால நடைமுறையுடன் இந்நூலின் ஒப்பாய்வு செய்துள்ளார்..
₹209 ₹220
1930 – 2004 வரை எழுதி வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார் கவிஞர் அ. வெண்ணிலா. கடினமான வேலையை எடுத்துக்கொண்டு, பெண்களின் சிந்தனைப் புரட்சியை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பெண்களின் உணர்வுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. கோதைநாயகி அம்மாளில் ஆரம்பித்து வெண்ணிலா வரைக்கும் ரசிக்கத்..
₹475 ₹500