-5 %
ஆண்கள்
ஜி.ஆர்.சுரேந்தர்நாத் (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2015
- ISBN: 9789383067244
- Page: 136
- Language: தமிழ்
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஒரு ஆணுக்கு தனது வாழ்க்கையின் ஏதாவது ஒரு பருவத்தில், தன் வாழ்க்கையை நிறுத்தி வைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால்,, தன் இளமைக் காலத்தில்தான் நிறுத்தி வைத்துக்கொள்வான். இளமைக் காலம்... ஆண்களின் மகத்தான கொண்டாட்டக் காலம். ஒரு முடிவே இல்லாத இனிய கனவு போல் நீண்டுகொண்டிருந்த நமது இளமைக்காலம், எவ்வளவு வேகமாக கலைந்துவிடுகிறது? எவ’வளவு வேகமாக நமது இளமையின் ஈரச்சிறகுகள் உதிர்ந்துவிடுகிறது? கண்களில் நீர் வர நண்பர்களுடன் சிரித்த அந்த டீக்கடை பெஞ்சுகளை யார் தூக்கிக்கொண்டு போனார்கள்? ஒரே ஒரு பெண்ணின், ஒரு வினாடி பார்வைக்காக நாள் முழுக்க நின்றுகொண்டிருந்த பேருந்து நிறுத்தங்களை யார் இடித்தார்கள்? ரயில் நிலையத்தில் குமுறி, குமுறி அழுதுகொண்டே பிரிந்த கல்லூரி நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? யாரோ ஒரு இளம் பெண்ணின் தலையிலிருந்து விழுந்த ரோஜாப்பூவை எடுத்துக் கொடுத்தபோது புன்னகைத்த அல்லது முறைத்த தேவதை இப்போது எத்தனை தேவதைகளுக்கு தாய்? கடைசி வரையிலும் கண்களால் மட்டுமே பேசிவிட்டு காணாமல் போன இளம் பெண்கள், இப்போதும் ஆண்களின் கவிதைகளில் வாழ்ந்துகொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியுமா? குரூப் ஸ்டடி என்று குரூப்பாக கெட்டுத் திரிந்த இரவுகள் ஏன் விடிந்தது?
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெண் பெயருக்கும் ஒரு சீசன் இருக்கிறது. எனது இளமைக்காலம் காயத்ரிகளால் நிரம்பி வழிந்தது. ஒரு திருமண வீட்டில் நீங்கள் காயத்ரி என்று சத்தமாக அழைத்தால் பத்து காயத்ரிகள் வந்து நிற்பார்கள். 1990களில் நீங்கள் கோயிலுக்குச் சென்றால் வாசலில் பூ விற்கும் காயத்ரியை பார்த்துக் கொண்டே அர்ச்சனைக் கூடையுடன் வரும் காயத்ரியின்மீது மோதி, நே விளக்குடன் வரும் காயத்ரி மேல் விழுந்து கோயிலில் இருக்கும் அத்தனை காயத்ரிகளும் ஏண்டா உனக்கு கண்ணில்லையா? என்பார்கள்.
Book Details | |
Book Title | ஆண்கள் (Aangal) |
Author | ஜி.ஆர்.சுரேந்தர்நாத் (Ji.Aar.Surendharnaadh) |
ISBN | 9789383067244 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 136 |
Year | 2015 |
Category | Short Stories | சிறுகதைகள், Love | காதல் |