Menu
Your Cart

கொதிக்குதே... கொதிக்குதே...

கொதிக்குதே... கொதிக்குதே...
-5 % Available
கொதிக்குதே... கொதிக்குதே...
ஆதி வள்ளியப்பன் (ஆசிரியர்)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாம் வாழும் பூமி. ஆயிரம் விநோதங்களை உள்ளடக்கியது. புல்,பூண்டுகள், ஜீவராசிகள் பூமியில் உயிர்வாழ்வதற்கு அடிப்படை ஆதாரம் தட்பவெப்பம். பூமி உருவான காலத்தில் இருந்து தட்பவெப்ப நிலை இருந்து வருகிறது. தட்பவெப்பம் என்றால் என்ன? ஓர் இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சராசரி வானிலை அளவுதான் தட்பவெப்ப நிலை எனப்படுகிறது. மழைப்பொழிவு, சூரியஒளி, காற்று மற்றும் அதன் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவை தட்பவெப்ப நிலையை தீர்மானிக்கின்றன. தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றமே காலமாற்றம். இந்த காலமாற்றமானது நீண்டகால மாற்றமாக நிகழ்ந்து வருகிறது. அதாவது கோடைக்காலம், குளிர்காலம், மழைக்காலம் என காலமாற்றம் நிகழ்கிறது. இந்த காலமாற்றத்திற்கு ஏற்றவாறு உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தங்களை தகவமைத்துக் கொள்கின்றன. ஆனால், தற்போது மனித செயல்பாடுகளின் காரணமாக காலநிலை மாற்றம் வேகமாக நிகழ்ந்து வருகிறது. இதன்காரணமாக கோடைமழை தள்ளிப்போகிறது. வெயில் கொளுத்துகிறது. மனிதனுடன் தொடர்புடைய இயற்கைக்-கு எதிராக எதுநடந்தாலும் அது மனிதகுலத்திற்கு எதிரான அழிவுக்கு வழிவகுக்கும். தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களினால் புவி வெப்பமடைகிறது. புவி வெப்பமடைவதால் அரிய தாவரங்கள் அழியும். இதனால் என்ன நடக்கும்? பூமிக்கு வரக்கூடிய பேராபத்தை இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் நம்மை எவ்வாறு பாதிப்படையச்செய்கிறது என்பதை எச்சரிக்கை உணர்வோடு சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் ஆதி வள்ளியப்பன். புவி வெப்பமாவதில் இருந்து மனிதன் தன்னையும், தான் வாழும் உலகையும் காத்துக்கொள்வது எப்படி? சூழல்கேட்டினால் உருவாகியுள்ள அபாயத்தில் இருந்து மனிதகுலம் மீள்வது எப்படி? நம்மைக்காத்து வரும் இயற்கையைப் பாதுகாப்பது எப்படி? என பல்வேறு கேள்விகளுக்கு விடைசொல்கிறார் நூலாசிரியர். அடிப்படையில் பத்திரிகையாளரான ஆதி வள்ளியப்பன் சிறந்த சூழலியல் ஆர்வலர். நம் வாழும் சூழலை காப்பதற்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக கொதிக்கும் பூமியை சமூகப்பார்வையோடு படைத்திருக்கிறார். கொதிக்கும் பூமியை படியுங்கள்! வாழும் சூழல் பற்றிய விழிப்பு உணர்வை பெறுங்கள்!
Book Details
Book Title கொதிக்குதே... கொதிக்குதே... (Kothikuthe Kothikuthe)
Author ஆதி வள்ளியப்பன் (Aadhi Valliappan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - ஆதி வள்ளியப்பன்:(விரிவான புதிய பதிப்பு)செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போனது என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் .அது உண்மையா? இல்லை என்று சொல்லும் இந்த புத்தகம் . அதற்கான உண்மையான காரணத்தைப் பட்டியல் போடுகிறது.சிட்டு..
₹86 ₹90
இயற்கையுடன் நாம் கொண்டிருந்த நெருக்கம், முற்றிலும் துண்டிக்கப்பட்டது போலாகிவிட்டது. காக்கைக் குருவிகள் தொடங்கி மண்புழுக்கள்வரை எல்லாமே அந்நியமாகிவிட்டன. இந்தப் பின்னணியில் ஆச்சரியங்கள் நிரம்பிய உயிரினங்களின் உலகைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான எளிய முயற்சிகளைப் பேசுகிறது இந்த நூல்...
₹48 ₹50
பறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம். இதுபோல தமிழகத்தின் முக்கிய பறவை சரணாலயங்களில் கிடைத்த நேரடி அனுபவங்களின் அடிப்படையில், பறவைகளை நோக்குவதற்கு எளிதா..
₹48 ₹50
ஒரு தாத்தா பூ தன் தாய்ச்செடியிடம் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்து பறந்து காடெல்லாம் சுற்றுகிறது. அப்படிப் பறந்தபோது எங்கேயெல்லாம் போனது? யாரையெல்லாம் பார்த்தது? அப்புறம் அந்த தாத்தா பூவே ஆச்சரியப்படும் வகையில், அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது யார் தெரியுமா?..
₹43 ₹45