-5 %
நடிகையர் திலகம் சாவித்திரி
இருகூர் இளவரசன் (ஆசிரியர்)
₹214
₹225
- Edition: 1
- Year: 2017
- ISBN: 9789380369587
- Page: 256
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தோழமை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எவ்வளவு உயரத்தில் சினிமா ஒருவரைத் தூக்கி நிறுத்துகிறதோ அதைவிடப் பல மடங்கு கீழே தூக்கியும் எறிந்துவிடும். இதற்கு உதாரணம் சாவித்திரியின் வாழ்க்கை. திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்புத் திறமையால் நடிகையர் திலகமாக சாவித்திரியை மக்களுக்குத் தெரியும். ஆனால், படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, நெருக்கடியான நேரத்தில் நடிகர் சுருளிராஜனுக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்து உதவியவராக, குழந்தைத்தனம் மிக்கவராக சாவித்திரியின் பன்முகங்களைக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
அன்றைய திரையுலகச் சூழல், நடிகர் சந்திரபாபுவின் வீட்டை எம்ஜிஆர் மீட்டுக் கொடுத்தது, சாவித்திரியின் நிலத்தை திமுகவைச் சேர்ந்த பிரபல நடிகர் குறைந்த விலைக்கு அபகரித்தது, கறுப்புப் பணப் பதுக்கல்காரர்களை விட்டுவிட்டு சாவித்திரி மீதான வருமானவரித் துறையினரின் கெடுபிடி என்று அந்தக் காலகட்டத்தை கண்முன் நிறுத்தியுள்ளது புத்தகம். பிரபலங்களோடு சாவித்திரி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் ஏராளமான புகைப்படங்களும் இந்தப் புத்தகத்தில் உண்டு.
இந்தியாவில் எந்த நடிகைக்கும் இல்லாத சிறப்பாக ஆந்திரத்தில் சாவித்திரிக்குச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு புகழ் இருந்து என்ன? ‘பிராப்தம்’ என்ற திரைப்படத்தை எடுத்த சாவித்திரிக்குக் கடைசிக் காலத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் பிராப்தம் இல்லை. திரைப்படங்களில் சாவித்திரியின் சோகத்தைப் பார்த்தால் மனது கனக்கும். புத்தகத்தை படித்து முடிக்கும்போதும் அதே உணர்வு.
Book Details | |
Book Title | நடிகையர் திலகம் சாவித்திரி (Actress Savithiri) |
Author | இருகூர் இளவரசன் (erukuur elavarasan) |
ISBN | 9789380369587 |
Publisher | தோழமை (thozhamai) |
Pages | 256 |
Published On | Jan 2017 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு |