- Edition: 1
- Year: 2017
- Page: 107
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆகுதி பதிப்பகம்
யாப்பு-(டொனமூர் முதல் சிறிசேனா வரை) - திருநாவுக்கரசு :
இந்திய ஆதிக்கம் பற்றிய நீண்ட வரலாற்று அச்சம் காரணமாக இந்திய எதிர்ப்பு உணர்வை சிங்கள மக்கள் இயல்பாகவே கொண்டுள்ளனர்.அவர்கள் ஈழத் தமிழரை மொழி,மத அடிப்படையில் இந்தியாவுடன் இணைத்துப் பார்ப்பதனால் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை ஈழத் தமிழர் மீது புரிந்து வருகின்றனர்.
இந்தியாவிற்கு அருகே இந்துமாக்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தை இலங்கைத் தீவு கொண்டுள்ள நிலையில் இந்தியாவின் பகைமை நாடுகள் இலங்கை அரசின் நட்பைப் பெறுவதற்காகவும்,கேந்திர நலனை அடைவதற்காகவும் தமிழருக்கு எதிரான இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குகின்றன.
சிங்கள மக்களின் இந்திய எதிர்ப்புவாதமும்,அந்நிய நாடுகளின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுகளும்,அவற்றின் கேந்திர நலன்களும் ஒன்றாக இணைந்து ஈழத் தமிழர்களை படுகுழியில் தள்ளி வருகின்றன.
இறுதி அர்த்தத்தில் ஈழத் தமிழரின் வீழ்ச்சியின் மூலமே இலங்கையில் இந்தியாவின் வீழ்ச்சியை நிர்ணயிக்கலாம் என்ற சிங்கள இராஜதந்திரிகளின் நீண்டகால அரசியல் நோக்கிற்கு ஈழத்தமிழர்களே அனைத்து வழிகளிலும் பலியாகின்றன.இதன்படி ஈழத் தமிழரின் வீழ்ச்சி இந்தியாவின் வீழ்ச்சியாகவும் அமைகிறது
Book Details | |
Book Title | யாப்பு (டொனமூர் முதல் சிறிசேனா வரை) (Yappu) |
Author | மு.திருநாவுக்கரசு (mu.thitunavukarasu) |
Publisher | ஆகுதி பதிப்பகம் (aguthi publication) |
Pages | 107 |
Published On | Aug 2017 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |