-5 %
Out Of Stock
அமானுஷ்யம்
ஜி எஸ் எஸ் (ஆசிரியர்)
Categories:
Archeology | தொல்லியல்
₹95
₹100
- Edition: 1
- Year: 2015
- ISBN: 9788184766783
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் அனைத்து சங்கதிகளும் அமானுஷ்யங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத காற்று, ஒலி போன்றவை நம்மை சில நேரம் கிலி ஏற்படுத்துபவை. உயிரற்ற பொருட்கள் மனிதனை அச்சம்கொள்ள வைப்பதை அமானுஷ்யம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது? யாருக்கும் தீங்கு விளைவிக்காத காக்கைகள்கூட மனிதனை பழிவாங்குகின்றன. உயிரற்ற கார் கூட மனிதனை விரட்டி கொல்கிறது. ஏன் மரம், செடிகள் கூட மனிதனுக்கு எமனாக வாய்க்கின்றன. ஏன்? எப்படி? இது சாத்தியமா? இந்தப் புத்தகத்தைப் படித்தால் நீங்களும் அதிர்ந்து போவீர்கள். உயிரற்ற பொருட்களுக்கு பழிவாங்கும் தன்மை இருக்க முடியுமா? அந்தப் பொருட்களின் ஒவ்வொரு பாகத்தையும் தயாரிக்கும் தொழிலாளியின் மனநிலை அந்தப் பொருளை ஓரளவு பாதிக்க வாய்ப்பிருக்கிறதாம். அதனால் அந்த மனிதனின் எண்ண ஓட்டப்படி அந்தப் பொருளின் தன்மையும் இருக்கும் என்பன போன்ற பகீர் தகவல்களும் இந்த நூலில் உள்ளன. மனித எண்ணங்களுக்கு ஒரு காந்த சக்தி உள்ளது. அது, மற்ற மனிதர்களையும் தாக்கும். ஜடப் பொருட்கள் மீது படியும் வாய்ப்பு இருக்கலாம். தனக்குப் பிடிக்காததைச் செய்யும் மனிதர்களை, காக்கைகள் திட்டுவதும் உண்டாம். தன் இனத்தவரை அழைத்துக் கொண்டு வந்து அந்த மனிதரைச் சுற்றி வளைப்பதும் உண்டாம். மரம், செடிகளுக்கும் அதிசய சக்தி இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். நம்மைப்போல் செடிகள் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. ஆனால் ஒரு செடி சிக்னல் அனுப்புவதும் அதை மற்றொரு செடி புரிந்துகொள்வதும் நடக்குமாம். இப்படி அமானுஷ்ய தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
Book Details | |
Book Title | அமானுஷ்யம் (Amanushyam) |
Author | ஜி எஸ் எஸ் |
ISBN | 9788184766783 |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |
Pages | 176 |
Published On | Sep 2015 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |