-5 %
அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்
₹138
₹145
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788184464764
- Page: 145
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விஜயா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
லெபனான் நாட்டு அறிஞரான மிகெய்ல் நைமி ஒருநாள் ஒரு காப்பிக் கடைக்குள் மழைக்காக ஒதுங்கியபோது, அந்தக் கடையின் உரிமையாளர், அங்கு பணியிலிருந்து காணாமல் போய்விட்ட ஒரு அம்மை வடுமுகத்து இளைஞனைப் பற்றி நைமியியிடம் புலம்பியதோடு அந்த இளைஞன் எழுதி வைத்திருந்த நினைவுக் குறிப்புகளையும் அவரிடம் தருகிறார். அந்த நினைவுக் குறிப்புகளின் தொகுப்பே இந்நூல்.
அந்த இளைஞன் பெயரற்றவன், ஊரற்றவன், பொற்றோரைப் பற்றி அறியாதவன், ஆயினும் அவற்றைப் பற்றி கவலைப்படாதவன். "ஒற்றைப் பெயர் கொண்டு என்னை அழைப்பது எனக்கு சம்மதமில்லை, ஒவ்வொரு கணமும் நானொரு புதிய மனிதன்' என்றும் "ஒருவேளை எனக்கொரு நாடு இருந்தாலும்கூட அதை நான் துறந்து விடுவேன், பிரபஞ்சமே எனது வீடு' என்றும் கூறுகிறான். பெரிய தத்துவங்களைக்கூட எளிய மொழியில் எழுதியிருக்கிறான்.
"தனக்குத் தெரியாததை மறுப்பது மனித இயல்பு', "வாழ்க்கை மாளிகையைக் கட்ட பணம் அடித்தளமாக அமையாது',"போரை வாழ்க்கைப் போராட்டம் என்பதைவிட மரணப் போராட்டம் என்பதே சரி',"ஒரு முட்டாளின் கடவுள் அவனது முட்டாள்தனம்தான்'," தற்காலிகம் நிரந்தரமானது, நிரந்தரம் ஒரு மாயை'- போன்றவை நினைவுக் குறிப்புகளின் பல இடங்களில் காணப்படும் ஒருவரி தத்துவங்கள்.
கடல் பற்றிய சிந்தனையும் உழைப்பாளர் தினத்தன்று எழுதப்பட்ட குறிப்புகளும் தன் ஆத்மாவோடு நடத்தப்பட்ட உரையாடலும் மிகவும் சிறப்பானவை.
அந்நியத் தன்மையற்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு பலம் சேர்க்கிறது.
Book Details | |
Book Title | அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் (Ambai) |
Author | மிகெய்ல் நைமி |
Translator | கவிஞர் புவியரசு (KAvingar Puviyarasu) |
ISBN | 9788184464764 |
Publisher | விஜயா பதிப்பகம் (vijaya pathipagam) |
Pages | 145 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை |