Menu
Your Cart

சரோஜா திறக்கும் உலகம்

சரோஜா திறக்கும் உலகம்
-5 %
சரோஜா திறக்கும் உலகம்
சரோஜா ராமமூர்த்தி (ஆசிரியர்), அம்பை (பதிப்பாசிரியர்)
₹356
₹375
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாழ்க்கையை நேரடியாக நோக்கி எந்தவிதச் சப்பைக்கட்டுகளோ உபதேசங்களோ இல்லாமல் கதைகள் எழுதுபவர்களில் ஒருவர். மாறிவரும் காலம், மாறாத சிலவற்றுடன் தொடர்ந்து செய்ய நேரிடும் மௌன யுத்தங்களின் சாயல்கள் அவர் கதைகளில் உண்டு. இந்த யுத்தத்தில் உள்ள இழுபறி உறவுகள், இறுக்கங்கள், கோபங்கள், சோகங்கள், ஏய்ப்புகள், அடக்குமுறைகள், மௌனங்கள், சலனங்கள் எல்லாம் அவர் எழுதிய கதைகளில் பல வடிவங்களில் உருப்பெற்றன. தன் கதைகளில் எதையும் விளக்க முற்படுவதில்லை சரோஜா ராமமூர்த்தி. எந்த நிகழ்வையும் கதாபாத்திரத்தையும் அலசி ஆராய்ந்து இதனால் இது என்று நியாயப்படுத்துவதில்லை. தீர்ப்புக் கூறும் பொறுப்பையும் ஏற்பதில்லை. இதைத்தான் மிகையில்லாமல் “குறைபடவே சொல்லல்” என்று க.நா.சு. பாராட்டியிருக்கிறார். அவர் பாணியில், அவர் நோக்கில் அவர் எழுதிய கதைகளை ஒரு தொகுப்பாக இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவந்து மீண்டும் அவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைக்க இதுவும் ஒரு காரணம். மீண்டும் சரோஜா ராமமூர்த்தியைப் படிக்கும் உந்துதலை இத்தொகுப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
Book Details
Book Title சரோஜா திறக்கும் உலகம் (Saroja thirakkum ulagam)
Author சரோஜா ராமமூர்த்தி
Editor அம்பை (Ambai)
ISBN 9789355232502
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 296
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அம்பையின் ஐந்தாவது சிறு கதைத் தொகுதி. இத்தொகுப்பில் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. பலவும் இதுவரை பிரசுரம் பெறாத கதைகள்...
₹190 ₹200
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதி வருபவரும் தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவருமான அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இது. இதுவரை பிரசுரமாகாத 13 புதிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன...
₹228 ₹240
அம்பை என்ற புனைபெயரில் எழுதும் சி. எஸ். லக்ஷ்மி அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. பேச்சும் மௌனமும் ஒன்றையொன்று கடந்து சென்றுகொண்டிருக்கும் அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்து வந்திருக்கிறது. ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில..
₹228 ₹240
1971முதல் 1976வரை அம்பை எழுதிய கதைகள் இதில் உள்ளவை. ‘சிறகுகள் முறியும்’ தொகுப்பின் கதைகளோடு, மற்ற கதைத் தொகுப்புகளில் வராத இரு கதைகளையும் இணைத்த மறுபதிப்பு. ஒரு களத்தில் நிற்காமல் பல களங்களில் நடைபெறும் கதைகள் இவை. 1967இல் சென்னையில் தொடங்கி 1976இல் தில்லியில் முடியும் காலகட்டத்தை உள்ளடக்கிய கற்..
₹181 ₹190