Menu
Your Cart

அம்பானி : ஒரு வெற்றிக் கதை

அம்பானி : ஒரு வெற்றிக் கதை
-5 % Out Of Stock
அம்பானி : ஒரு வெற்றிக் கதை
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹190
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் உற்பத்தி, அதன்பின் பாலியெஸ்டர் உற்பத்திக்கான மூலப்பொருள்களை உருவாக்குவது, அந்த மூலப்பொருள்களின் ஆதாரமான பெட்ரோலிய சுத்திகரிப்பு, அங்கிருந்து பெட்ரோலையே தரையிலிருந்தும், கடலுக்கு அடியிலும் தோண்டுவது என்று படிப்படியாக, பார்த்துப் பார்த்து தன் தொழிற்சாலைகளைக் கட்டியவர். அம்பானி 70 mm அளவுக்கு விரிந்த திரையில் கனவு கண்டார். பிரம்மாண்டமாக மட்டுமே யோசித்தார். அதன் விளைவுதான் இன்று ரிலையன்ஸ் இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் நிறுவனமாக உள்ளது. ஆனால் இத்தனையும் அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல. உழைப்பால், தைரியத்தால், முயற்சியால் வந்தது. அதே சமயம் காலத்துக்குத் தகுந்தாற்போல அரசுகளையும் அதிகாரிகளையும் தனக்குச் சாதகமாக வளைத்துக் கொள்வதன் மூலமும் அரசு உத்தரவுகளை தன் வசதிக்கேற்றவாறு புரிந்துகொள்வதன் மூலமும் அம்பானி தன் நிறுவனத்தை வளர்த்தார். அம்பானி, தன்னை எதிர்ப்பவர்களை அவர்களது ஆயுதங்களைக் கொண்டே மழுங்கடித்தார். இன்றைய காலகட்டத்தில் திருபாய் அம்பானியின் சில செயல்கள் நமக்கு ஏற்புடையதாக இருக்காது. ஆனால் அவரது விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இந்தியா மீதான பற்று, சக ஊழியர்கள் மீதான மரியாதை, தொழில் மீதான ஆழ்ந்த பக்தி ஆகியவை இன்றைக்கும் நம் அனைவருக்கும் வழிகாட்டக் கூடியவை. இந்தப் புத்தகம் அம்பானியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, கடந்த நாற்பதாண்டுகளில் இந்தியாவின் தொழில்துறையின் வரலாறும் இதில் அடங்கியிருக்கிறது. எந்தவொரு சுய முன்னேற்ற நூலைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான பலனை இந்தப் புத்தகத்தினைப் படிப்பதன் மூலம் ஒருவர் அடைய முடியும். இது நிஜமான வாழ்க்கை, வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல.' Dhirubai Ambani is the inspiration for all those who want to start their own business in India. He came from a very ordinary background, developed gradually and established a great kingdom called Reliance. It all started fom selling clothes and went on to manufacturing textiles, polyester, its raw materials, and then purification of petroleum which was the basic material for polyester production. Then he started unearthing petrol from under the earth and the sea. Ambani built his empire by carefully taken steps. Ambani dreamed in a 70mm wide screen. He thought always on a great scale. He imagined spectacularly. And the result of it is that Reliance is today the biggest private company in India. All this was accrued not due to any luck. It was the result of hard work, courage and undaunted effort. At the same time, in keeping with the tune of the times, Ambani developed his company by bending governments and officials to take decisions in his favour and by taking government orders in his own way. Ambani attacked his enemies with their own weapons. Some of his actions may not be agreeable to us today. But his unceasing efforts, self-confidence, patriotism, respect for colleagues and dedication to the profession will be inspiring to all of us. This book is not simply the life of Ambani but contains the history of Indian industry of the past forty years. One can gain more from his life than from any book on self-improvement.
Book Details
Book Title அம்பானி : ஒரு வெற்றிக் கதை (Ambani Oru Vetri Kathai)
Author என்.சொக்கன் (N.Chokkan)
ISBN 9788183680462
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 168
Published On Nov 2004
Year 2005

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185
இன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்?..
₹143 ₹150