- Edition: 1
- Year: 2014
- Page: 76
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Apple Books
சின்ன தூண்டில் பெரிய மீன்
அதிகம் படித்தவர்கள், பெரிய பணக்காரர்கள், பெரிய வியாபாரம் செய்பவர்கள், பலமிக்கவர்கள் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று கட்டாயமா என்ன? இருப்பதை வைத்தே பெரிய வெற்றிகளைப் பெற்றவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
பத்தும் பத்தும் சேர்ந்ததுதான் இருபது என்பது கணக்கு, ஆனால் பத்தும் பத்தும் இல்லாமலேகூட சிலரால் இருபதைப் பெற்றுவிட முடிகிறது. அவர்கள் சேர்ப்பது இரண்டையும் பூஜ்ஜியத்தையும் மட்டுமே. அவற்றை ஒன்றுக்கு ஒன்று அருகில் வைத்து! அவர்கள் செய்வது சாமர்த்தியம். அவர்களிடம் இருக்கும் சின்ன தூண்டிலை வைத்தே பெரிய மீன்களைப் பிடிக்கிறார்கள்.
அதற்கு வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். அது எப்படி என்பதை எளிமையாகவும், சுவையாகவும் இந்த நூலில் விளக்குகிறார் சோம வள்ளியப்பன்.
இதுவரை 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரின் அன்ன அன்னப் பணம் (5 பாகங்கள்), பணமே ஓடிவா போன்ற பங்குச் சந்தை தொடர்பான நூல்களும், காலம் உங்கள் காலடியில், ஆளப்பிறந்தவர் நீங்கள் போன்ற சுயமுன்னேற்ற நூல்களும் மிகவும் பிரபலமானவை.
தினமணி, விகடன், குமுதம், அமுத சுரபி போன்றவற்றில் தொடர்கள் எழுதியவர். அனைத்து தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்களிலும் பொருளாதாரம், மனிதவள மேம்பாடு குறித்தும், தன்னம்பிக்கை பயிலரங்குகள் முதலியவற்றிலும் தொடர்ந்து பேசிவருபவர் இவர்.
Book Details | |
Book Title | சின்ன தூண்டில் பெரிய மீன் (Chinna Thoondil Periya Meen) |
Author | சோம.வள்ளியப்பன் (Soma Valliappan) |
Publisher | Apple Books (Apple Books) |
Pages | 76 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Business | வணிகம், Self - Development | சுயமுன்னேற்றம் |