Menu
Your Cart

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!
-5 %
அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!
அறிஞர் அண்ணா (ஆசிரியர்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கம்பன் யாத்த இரமாயண காவியத்தின் மீது தீ பரவட்டும் என்று எழுச்சிப் போர் முரசு கொட்டினார் அறிஞர் அண்ணா. மிகப் பெரிய பண்டிதர்களான ரா.பி.சேதுப் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்களின் கருத்துகளை மறுத்துப் பேசி, கம்பராமாயணம் தமிழர்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டு களுடன், அண்ணா அவர்களுக்கே உரித்தான நளினத்துடனும், கம்பீரத்துடனும் விவாதக் கணைகளைத் தொடுத்தார். மறுத்துப் பேசியவர்களில் ஒருவர் எனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி நழுவினார். இன்னொருவர் தோல்வியையும் நாகரிகத்தோடு ஏற்றுக் கொண்டார். காடேக ராமன் கிளம்பும்போது உடன் வரப் புறப்பட்ட சீதையுடன் வாதிடுகையில், சீதை கூறும் மொழியின் பகுதியையும், சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும் வால்மீகி கூறியுள்ளபடியே கம்பர் எடுத்து எழுதியிருப்பின், அந்த ஆரியப் பாத்திரங்களிடம் ஆபாச குணங்கள் கிடந்ததைத் தமிழர் கண்டு, அவர்களை தெய்வங்களென்று போற்றும் கீழ் நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள். கம்பரோ, கவித் திறமையினால் ஆரிய இராமனைக் குற்றங்குறையற்ற சற்பாத்திரனாக்கிக் காட்டி வழிபாட்டுக்குரிய தெய்வமாக்கிவிட்டார் என்பதுதான் அறிஞர் அண்ணாவின் விவாதம். கம்பனின் கவித் திறனை அவர் எந்த இடத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.
Book Details
Book Title அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்! (Arinyar Annaavin Thee Paravattum)
Author அறிஞர் அண்ணா (Arignar Annaa)
ISBN 9789380220567
Publisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)
Pages 68
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தீ பரவட்டும்..
₹57 ₹60
நிலையும் நினைப்பும்“அகநானூறு, புறநானூறுகளில் எந்தத் தமிழ்நாட்டு மன்னனாவது போருக்குக் கிளம்பும்பொழுது, படை கிளம்பும் முன் யாகம் செய்தான் என்றோ, பரமசிவத்திடம் பாசுபதம் பெற்றான் என்றோ எங்கேயாவது பாடலுண்டா?”-அறிஞர் அண்ணா..
₹29 ₹30
ஆரிய மாயை..
₹57 ₹60