Menu
Your Cart

ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட்

ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட்
-5 %
ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட்
ச.சிவ-வல்லாளன் (ஆசிரியர்)
₹100
₹105
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நமது மரபணுக்கள் நம் ஆதாரம். நமது உடல்-மனம்-அறிவுத்திறன் என்று நம்மிடம் எத்தனை உண்டோ அத்தனைக்கும் பொறுப்பு, உடல் செல்களில் பொதிந்துள்ள மரபணுக்கள் (GENES)தான். தலைமுறை தலைமுறையாக தாய்-தந்தை இருவரின் அடிப்படைப் பண்புகளை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துப் பாதுகாப்பவை, மரபணுக்களே. மரபணுக்கள் சீராகச் செயல்படுவதற்கு அவைகளுக்கும் ஊட்டச்சத்துகள் இன்றியமையாதது. ஊட்டச்சத்து பற்றாக் குறையால் மரபணுக்களின் செயல்பாடுகளில் பிறழ்ச்சி ஏற்படக்கூடும். மரபணுக்களின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாகச் செயல்படுகின்றன ஆன்டிஆக்ஸிடன்ட்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என்றால் என்ன? ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உணவில் இருந்து பெறும் ஊட்டச்சத்துக்களாகவோ அல்லது உயிர்ச் சத்துக்களாகவோ இருக்கலாம். உடலில் உருவாகும் என்சைம்களாகவும் இருக்ககலாம். ஆனால், எல்லாவகை ஊட்டச்சத்துகளும் உயிர்ச் சத்துகளும் என்சைம்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக இருக்க முடியாது. ஆன்டிஆக்ஸிடன்ட்களின் பயன் என்ன? நமது உடலின் இயற்கையான மூப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தி இளமையில் முதுமைப் பருவத்தை உருவாக்கக்கூடிய ஆற்றல்மிக்கவை ஃபிரிரேடிகல்கள். முதுமை தோற்றத்தைக் கொடுப்பதோடு நின்று விடாமல், முதுமை பருவத்துக்கு உரிய நோய்களையும் உருவாக்கிவிடும். OPC ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃபிரிரேடிகல்களை அழிக்கின்றன. அதனால் உடல் முதுமை வளர்ச்சி வேகம் குறைகிறது. இளமையில் முதுமைத் தோற்றம் தடுக்கப்படுகிறது. இத்தகைய ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அற்புதத்தன்மை குறித்து இந்த நூலில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். இந்த நூலைப் படித்தால் நம்மை நாம் உணரலாம். நம் உடம்புக்கு எது தேவை என்பதை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. நம்மை நாம் அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.
Book Details
Book Title ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட் (Arokiyamaga vaazha anti-oxidant)
Author ச.சிவ-வல்லாளன் (S.Siva Vallalan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Edition 1
Format Paper Back
Category உடல்நலம் / மருத்துவம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நம் எண்ணமே செயல் என்ற முதுமொழியைப் போல் நம் உணவே மருந்து என்ற புதுமொழி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உணவில் நல்லது? எது கெட்டது? கடந்த சில ஆண்டுகளாகப் பரம்பரை வியாதிகள் என்று அழைக்கப்பட்ட புற்றுநோய், சர்க்கரை வியாதிகள் இன்று அனைவரையும் பீடிக்கும் நிலை உருவாகியுள்ளது. உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம்..
₹195 ₹205