-5 %
அஸீஸ் பே சம்பவம்
₹124
₹130
- Year: 2011
- ISBN: 9789380240466
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் ஓர் இரவு நடக்கும் சம்பவம் அஸீஸ் பேயைக் கவனத்துக்குரியவனாக்குகிறது. அந்தச் சம்பவம் மட்டும் நடந்திராவிட்டால் அவன் வெறும் தான்தோன்றி, மூர்க்கன், சுயநலக் காதலனாக மட்டும் இருந்திருப்பான். எல்லாப் பெண்களும் தன்னால் காதலிக்கப்படுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று செருக்குடன் திரிந்த அஸீஸ் பேயை மரியத்தின் மேலுள்ள மாளாக் காதல் தடுமாறச் செய்கிறது. வேலையைத் துறக்கச் செய்கிறது. பெற்றோரை இழக்கச் செய்கிறது. இஸ்தான்புல்லிலிருந்து பெய்ரூட்வரை சாகசப் பயணம் செய்ய வைக்கிறது. இருந்தும் மரியம் அவனுடைய காதலை உதாசீனம் செய்கிறாள். அஸீஸ் பே கற்றுக்கொள்ளும் பாடம்: தான் ஒரு கலைஞன், கலைஞன் மட்டுமே. இந்த உணர்வுதான் மது விடுதிச் சம்பவத்துக்கு அவனை இட்டுச் செல்கிறது.
சொல்லப்படும் கதையின் பொருளைச் சார்ந்தல்ல, சொல்லும் முறையைச் சார்ந்தே இலக்கியம் சமகாலத்தன்மை பெறுகிறது என்பதற்கான நவீன துருக்கி இலக்கிய உதாரணங்களில் ஒன்று இந்த நெடுங்கதை. அய்ஃபர் டுன்ஷின் படைப்பு இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் வெளியாகிறது.
Book Details | |
Book Title | அஸீஸ் பே சம்பவம் (Aseez Bay Sambavam) |
Author | அய்ஃபர் டுன்ஷ் (Ayfer Tunç) |
Translator | சுகுமாறன் (Sukumaran) |
ISBN | 9789380240466 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 96 |
Published On | Nov 2010 |
Year | 2011 |
Format | Paper Back |
Category | Novel | நாவல் |