- Edition: 1
- Year: 2016
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நற்றிணை பதிப்பகம்
ஆட்டுப்பால் புட்டு
ஒரு பழுதடைந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு என்னைக் கொல்லப் போவதாக மிரட்டுகிறாய். என்னைக் கொல்வதால் உனக்கு என்ன பயன்? அடுத்த நாள் உன் ராணுவத்துக்கு வெற்றி கிட்டிவிடுமா? போரை நிறுத்திவிடுவார்களா? என்னைப்போல எத்தனை போராளிகள் இருக்-கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் நீ தேடித்தேடிக் கொல்-வாயா? இந்த வயதுக்குள் நீ இதுவரை எத்தனைக் கொலைகள் செய்திருப்பாய். உன் எதிரிகள் எதற்காகப் போரிடுகிறார்கள் என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறாயா? அவர்களுக்குக் குடும்பம் மேல் பற்றில்லையா? பெண்சாதி, பிள்ளைகள் வாழவேண்டும் என்று ஆசைப்படமாட்டார்களா? ஆனாலும் எதற்காக மரணத்தைக்கண்டு அஞ்சாமல் போர் புரிகிறார்கள். அவர்களுக்கு எங்கிருந்து அந்த வெறி வருகிறது? அடிமை களாக வாழ அவர்களுக்குப் பிடிக்கவில்லை. உலகத்தில் பிறந்த எந்த மிருகத்துக்கும் பறவைக்கும் சுதந்திரம் வேண்டியதாய் இருக்கிறது. ஒரு புழுவுக்குக்கூட சுதந்திரம் தேவை. அப்படியிருக்க மனிதன் சுதந்திரத்துக்குப் போராடுவதில் என்ன தப்பு இருக்கிறது. அதை யோசித்துப் பார்த்திருக்கிறாயா?
- நூலிலிருந்து
Book Details | |
Book Title | ஆட்டுப்பால் புட்டு (attupal puttu) |
Author | அ.முத்துலிங்கம் (A.muthulingam) |
Publisher | நற்றிணை (Natrinai) |
Pages | 0 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |