Menu
Your Cart

அன்றாடம்

அன்றாடம்
-5 %
அன்றாடம்
அழகிய பெரியவன் (ஆசிரியர்)
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சற்றே துணிவு கொண்டு சிறுகதைகளை எழுதுவதற்கு மாறிய எனது மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன். உண்மையில் எனக்கு அது ஒருசிறந்த தருணமாகவே இருந்திருக்கக் கூடும். சிறுகதையை எழுத அமரும் ஒவ்வொரு முறையும் அதற்கொரு தனித்த மனநிலை வேண்டப்படுவதை உணர்கிறேன். ஒரு தியானத்தைப் போல. உள்ளுக்குள் எதைச் சொல்ல நினைத்தாலுமே கூட, ஒரு கருத்துக்கு உருவாக்கப்படுவது சிறுகதையல்ல என்பதே என் நம்பிக்கை. மனதில் வந்து விழும் விதை இருப்புக்கட்டி மெல்ல முகிழ்த்து முளைக்க வேண்டும். அது நன்கு விளைவதற்கு அனுபவமும், மொழியும், கருத்தறமும் துணைப் பொருட்கள். அன்றாடம் தொகுப்புக்கு ஒரு குறிப்புண்டு. பெரும்பாலான கதைகள் கொரோனா காலத்தில் எழுதப்பட்டவை. வேறு வேறு களங்களில் எழுதிப் பார்த்திட முனைந்தவை. ஒருசேர பார்க்கையில் இதில் காமத்தையும் சாதியிழிவையும் பிணைத்து எழுத முயற்சி செய்திருக்கிறேன். புவி முழுமைக்கும் காமம் மனிதனை உந்தும் காரணியாக இருக்கிறது. இந்தியாவில் காமத்தோடு சேர்ந்து சாதியும் மனிதரை இயக்குக்கிறது. இரண்டும் இணையும் உளவியல் புள்ளிகள் முக்கியமானவை. இரண்டின் விளைவுகளும் தீவிரமானவையாகவும் குரூரமாய் அலைக்கழிப்பவையாகவும் உள்ளன. இக் கதைகளுக்கு ஆனந்த விகடன், உயிர்மை, தலித், நீலம் ஆகிய இதழ்கள் தமது பக்கங்களை அளித்தன.
Book Details
Book Title அன்றாடம் (Andradam)
Author அழகிய பெரியவன் (Azhagiya Periyavan)
ISBN 0
Publisher நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியச் சமூகம் உற்பத்திச் செய்கிற இலக்கியம், அரசியல், கலை இவை எல்லாவற்றிலும் வண்டி, வண்டியாய் மண்டிக்கிடக்கிறது சாதி. இவற்றை எதிர்கொள்கிறது அழகியப் பெரியவனின் இக்கட்டுரைத் தொகுப்பு...
₹210
திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்அழகிய பெரியவனின் ஆறு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு..
₹114 ₹120
ஞாபக விலங்குகாதலும் போராட்டங்களும் கனிந்ததொரு பருவங்களின் நினைவாகவும் விளைவாகவும் உள்ள கவிதைகள் இவை. மன்றலின் முறையீடுகள் மெளனா என்கிறப் படிமங்களாய் ஒரு பக்கமும், இருப்பின் எதிர்ப்பு தகிக்க ஜாதியை செவுளில் அறையும் போர்க்குண கவிதைகள் இன்னொருப் பக்கமுமென இலக்கிய இயக்கங் கொள்ள வைக்கிற எழுத்துக்களிவை..
₹86 ₹90
சிறுகதை,நாவல், கட்டுரைகள் எனத் தனித்துவ அடையாளங்களோடு தீவிரமாக இயங்கி வரும் அழகிய பெரியவன் நேர்காணல்களின் தொகுப்பு நூல். பல்வேறு இதழ்களில் வெளிவந்த இந்நேர்காணல்களில் அவரது படைப்புகளை பற்றியும் சாதி மற்றும் தலித் இலக்கியம் குறித்த அவரது பார்வைகளையும் புரிந்துகொள்ளவியலும். இம்முழுமையான நேர்காணல்களின் ..
₹128 ₹135