Menu
Your Cart

பிக் டேட்டா ஓர் அறிமுகம்

பிக் டேட்டா ஓர் அறிமுகம்
-5 %
பிக் டேட்டா ஓர் அறிமுகம்
ஜெ.ராம்கி (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நம்முடைய பெரும்பாலான நேரத்தைப் பணிச்சூழல், பொழுதுபோக்கு அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காக இணையத்தில் செலவிடுகிறோம். இணையம் இன்றி இனி நம்மால் இயங்கமுடியாது. இணையத்தில் நாம் என்னென்ன செய்கிறோம் என்பது அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. நம்மைப் பற்றிய விஷயங்கள் நம்முடைய அனுமதியில்லாமல் பகிரப்படுவது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? கோடிக்கணக்கான இணையவாசிகள் பற்றிய தகவல்கள், பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரத்திற்குத் திரட்டப்படுவதன் பின்னணியில் இருப்பது, பிக் டேட்டா (Big Data) தொழில்நுட்பம். இதனால் நமக்குப் பல நன்மைகளும் கிடைக்கலாம், தீமைகளும் நடக்கலாம். வணிக நிறுவனங்கள் தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்த உதவும் தகவல் சுரங்கமான பிக்டேட்டா குறித்த எளிய, தெளிவான வரைபடத்தை இந்தப் புத்தகத்தின் மூலம் அறியமுடியும். பிக் டேட்டாவின் உருவாக்கம், தகவல்கள் பெறப்படும் முறை, பகுப்பாய்வு, அதன் மூலம் பயனாளிகளுக்குக் கிடைக்கும் நன்மை - தீமைகள், வரப்போகும் சவால்கள், நம்மைப் பற்றிய விஷயங்களைப் பாதுகாப்புடன் கையாள்வது எப்படி என அனைத்து விஷயங்களையும் விரிவாகவும் எளிமையாகவும் எடுத்துச் சொல்கிறார், இப்புத்தகத்தின் ஆசிரியர் ஜெ.ராம்கி. இணையப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து, அத்தியாவசியமாக மாறிவிட்ட சூழலில், இந்தப் புத்தகம் அனைவருக்கும் ஒரு பயனுள்ள கையேடாக உதவும்.
Book Details
Book Title பிக் டேட்டா ஓர் அறிமுகம் (Big Data-Orr Arimugam)
Author ஜெ.ராம்கி (Je.Raamki)
ISBN 9788197926273
Publisher சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher)
Pages 128
Year 2024
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha