Menu
Your Cart

போக புத்தகம்

போக புத்தகம்
-5 %
போக புத்தகம்
போகன் சங்கர் (ஆசிரியர்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

போக புத்தகம் - போகன் சங்கர்:

எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டி, எங்கிருந்து வேண்டுமனாலும் இந்தப் புத்தகத்தை வாசித்து, ரசித்து மகிழ முடியும்.

ஒவ்வொன்றும் நிஜம் கலந்த சுவையான கற்பனை. அல்லது கற்பனை கலந்த சுவையான நிஜம். போகன் சங்கரின் தனித்துவமான நடையில் அதை வாசிக்கும் போது கட்டுக்கடங்காத உற்சாகம் பிறக்கிறது.

நட்பு, அரசியல், சினிமா, காதல், இலக்கியம், நையாண்டி என்று பக்கத்துக்குப் பக்கம் ஒரு புது விஷயம் முளைக்கிறது. பெரும்பாலும் புன்னகைத்துக்கொண்டேதான் முழு புத்தகத்தையும் வாசிப்பீர்கள். அல்லது அவ்வப்போது புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வாய்விட்டுச் சில நிமிடங்களாவது சிரிக்கவேண்டியிருக்கும். அல்லது ஆழ்ந்து சிந்திக்கவேண்டியிருக்கும்.

நல்ல எழுத்து உணர்ச்சிகளைத் தூண்டிவிடவேண்டும். ரசனை திறனைக் கூர்மைப்படுத்த வேண்டும். இதுவல்லவா வாழ்க்கை என்றும் இப்படியல்லவா அதனை ரசிக்க வேண்டும் என்று கிளர்ச்சிகொள்ளச் செய்ய வேண்டும். போகனின் எழுத்து அப்படிப்பட்டது. எனவே, இது உங்களுடைய புத்தகம்.

Book Details
Book Title போக புத்தகம் (Boga puththagam)
Author போகன் சங்கர் (Bogan Sankar)
ISBN 9788184937084
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 336
Year 2016
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தடித்த கண்ணாடி போட்ட பூனை - போகன் சங்கர்:கவிதைகள்......
₹124 ₹130
கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்:உண்மையில் மரணம் அல்ல, இருப்பே குழப்பமானதாகவும் புரிதலுக்குஎட்டாததாகவும் இருக்கிறது. இருள்அல்ல, அதன்மீது பாயும் வெளிச்சமேஅபாயகரமானதாகத் தோற்றமளிக்கிறது.நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும்இடையில், இருப்புக்கும் இறப்புக்கும்இடையில், வெளிச்சத்துக்கும்இருளுக்க..
₹190 ₹200
மிகு தீவிரத்துக்கும் விளையாட்டுத் தனத்துக்கும் மாறிமாறி பாயும் இழுவிசையின் பறக்கும் சொற்கள் நிரம்பியவை போகனின் கவிதைகள். ஆட்டம் முடிந்தும் கோமாளியின் கண்ணீர்க் காணத் தயங்கி நிற்கும் நெகிழ்மனமும் புவிமீது உயர்வு என்று சொல்லப்பட்ட எதையும் இரக்கமின்றி கேலி செய்யும் கடுமனமும் ஒருசேர போகனிடம் உண்டு. சர்வ..
₹95 ₹100