- Edition: 1
- Year: 2011
- ISBN: 9788184932058
- Page: 432
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
வானமே எல்லை!
கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை ஓர் ஆச்சரியப் புத்தகம், ஒருவராலும் முடியாததைச் சாதித்துக் காட்டவேண்டும் என்னும் அவருடைய வாழ்க்கை லட்சியத்தின் ஒரு சிறு பகுதிதான் ஒரு ரூபாய்க்கு விமானக் கட்டணம்.
சாமானியக் கற்பனைக்கு எட்டாத பல சாகசங்களை கோபிநாத் அநாயாசமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அவர் ஈடுபடாத துறைகளே இல்லை. இந்திய ராணுவ அதிகாரியாக பங்களாதேஷ் விடுதலைப் போரில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறார். இந்திய சீன எல்லையில் தனியே காவல்பணி புரிந்திருக்கிறார், விவசாயம் செய்திருக்கிறார். பால் பண்ணை, பட்டுப் பூச்சி வளர்ப்பு, மோட்டார் பைக் ஏஜென்ஸி, உடுப்பி ஹோட்டல், பங்குச் சந்தை என்று நீள்கிறது பட்டியல், அரசியலும் உண்டு. தேவே. கவுடாவை எதிர்த்து பிஜே.பி சார்பில் போட்டியிட்டிருக்கிறார், தோல்வியும் அடைந்திருக்கிறார்.
கவனிக்கவேண்டியது என்னவென்றால், அவர் தன் வெற்றிகளை மட்டுமல்ல, தோல்விகளையும் திரட்டித் தொகுத்தபடியேதான் முன்னேறியிருக்கிறார். சாகசங்களை ரசிக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், தடைகளைத் தகர்க்கவும் துணிந்துவிட்டால் எதுவுமே ஒரு பிரச்னை அல்ல என்பதைத்தான் அவருடைய சாதனைகள் நமக்கு உணர்த்துகின்றன.
பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு ராஜ்ஜியத்தைப் படைக்கத் தூண்டும் அனைவரும் படிக்கவேண்டிய பல பாடங்கள் இதில் உள்ளன. எனவேதான் ‘கல்லூரிகளில் இந்நூலைப் பாட நூலாக்க வேண்டும்!’ என்கிறார் அப்துல் கலாம்.
Book Details | |
Book Title | வானமே எல்லை (Vanamey ellai) |
Author | கேப்டன் கோபிநாத் (Captain Gopinath) |
Translator | பி.ஆர்.மகாதேவன் (P.R.Mahadevan) |
ISBN | 9788184932058 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 432 |
Year | 2011 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம் |