Menu
Your Cart

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
-5 %
சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
அழகர் நம்பி (ஆசிரியர்)
₹569
₹599
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவின் மிகப் பழமையான ‘அர்த்த சாஸ்திரம்’ நூலை எழுதியவர் என்பது சாணக்கியரின் ஆகப் பெரிய அடையாளம். இது 380 சுலோகங்கள் கொண்ட நூல். சாணக்கியர் சிறந்த அரசியல் மேதை. சிந்தனையாளர். சாணக்கியரில் தொடங்குகிறது இந்திய அரசியலின் புதிய சிந்தனை. அந்நாளைய தட்சசீல பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும் அரசியலும் போதித்த பேராசிரியர் சாணக்கியர். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவியதில் முக்கியப் பங்காற்றியவரும்கூட. முக்கியமாக, மவுரிய மன்னன் சந்திர குப்தனுக்கும்,அவரது மகன் பிந்துசாரனுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார். சாணக்கியருக்கு விஷ்ணுகுப்தர், கௌடில்யர் என்கிற பெயர்களும் உண்டு. அர்த்த சாஸ்திரம் இன்று நாம் வியந்து பாராட்டுகிற, தயங்காமல் சிந்திக்கிற ஒரு கலவையாக இருக்கிறது. அரசு நிர்வாகம், பொருளாதாரம் பற்றி பேசுகிற இந்நூல் அரசனின் கடமைகள், பொறுப்புகள் தொடங்கி கீழ்மட்ட அலுவலர்களின் பணிகள்வரை விவரிக்கறது, சட்டம்,நீதி,குற்றம், தண்டனை என்ற பல அம்சங்களையும் உள்ளடக்கிய நூல் அர்த்தசாஸ்திரம். ஒரு பேரரசை வீழ்த்தி இன்னொரு பேரரசை உருவாக்கியது சாணக்கியரின் விவேகமும் துணிவும் விடாமுயற்சியும்தான். அவரது அரசியல் வியூகங்களின் காரணமாகவே இன்றளவும் தலைசிறந்த ராஜதந்திரியாக அவர் போற்றப்படுகிறார்.
Book Details
Book Title சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் (Chanakiyarin Arta Shastram)
Author அழகர் நம்பி (Azhakar Nampi)
ISBN 9789383067435
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 504
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

போதி தர்மர்கௌதம புத்தரின் நேரடிச் சீடர்கள் பட்டியலில் போதி தர்மரின் பெயர் இல்லை. புத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவரும் அல்ல. காரணம், இருவருக்கும் இடையேயான கால இடைவெளி சுமார் ஆயிரம் ஆண்டுகள். என்றாலும், போதி தர்மரை இரண்டாவது புத்தர் என்று கொண்டாடுகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; பின்பற்றுகிறார்கள். எனில..
₹358 ₹377
"அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே' என்கிறார் ("மாமேகம் சரணம் வ்ரஜ' - பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம், எழுகூற்றிருக்கை, பாவை..
₹1,425 ₹1,500