Menu
Your Cart

காஞ்சி - சேரன் கவிதைகள்

காஞ்சி - சேரன் கவிதைகள்
-5 %
காஞ்சி - சேரன் கவிதைகள்
சேரன் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஈழ இனவழிப்பின் பின் சேரன் எழுதிய கவிதைத் தொகை வரிசையில் ‘காடாற்று’ (2011), ‘அஞர்’ (2018), ‘திணைமயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்’ (2019) என்பன வெளியாகின-. இப்பொழுது ‘காஞ்சி’. அதிர்ச்சியூட்டக்கூடிய படிமங்களின் அடித்தளத்திலிருந்து எழுகின்றன சேரனின் கவிதைகள். அனேகமாக, எல்லாக் கவிதைகளுக்குள்ளும் நம்மை உறைவில் ஆழ்த்திவிடக்கூடிய வரிகள் திடீரென்று எதிர்ப்பட்டு நம்மை நகரவிடாமல் செய்கின்றன. வெவ்வேறு உலகங்களை நோக்கி விரிகின்ற சேரனுக்கு, ஒரு நொடி வாழ்வுக்கும் மறு நொடி சாவுக்குமான இரண்டு நொடிகளுக்கு இடையில் தோன்றலும், தோன்றிப் பின் மறைவும், அழிவும்ஆக்கமும், போரும், பின்னும் போரும், உறவும் பிரிவும், களவும் காதலும், காமமும் ஊடலுமாய் எல்லாமே கவிதைகள். இவை சேரனின் தீர்க்கமான குரல்கள். முகத்தில் அறையுமாப்போல் இந்த உலகத்திற்கு முன் அவர் நிறைவேற்றும் பிரகடனங்கள். பாடித் தீராத வாழ்வு . . .
Book Details
Book Title காஞ்சி - சேரன் கவிதைகள் (Kanchi)
Author சேரன் (Cheran)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Eezham | ஈழம், Poetry | கவிதை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஊழிக்கும் இனப்படு கொலைக்கும் பின் கவிதை எழ முடியுமா? எழுத முடியுமா? முள்ளிவாய்க்காலுக்கும் நந்திக் கடலுக்கும் பின்னான சேரன் கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு என்பது இந்தக் கவித்தொகையில் உள்ள ஒரேயொரு தலைப்பற்ற கவிதை...
₹86 ₹90
சேரனின் கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசை வியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவது தான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடி களை, ஒடுக்குமுறைகளை சேரன் கவிதைகளாகத் தந்தபோது அது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் இலக்கியமாய..
₹38 ₹40
ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்தி சேரன். இவரது கவிதைகள் போர்ச் சூழலின் கொடுமைகள், புலம்பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற வன்முறை குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புகின்றன...
₹261 ₹275
போரில் மடிதலைவிட வாழ்தலைப் பற்றிப் பேசுவதே இன்றைய கவிஞனின் கடப்பாடு என்பேன். அஞர் போரின் வலியைக் கிளறி வாழ்வை நுகர்வதற்கான உரிமைக்காகப் போராட நம்மைத் தூண்டுகின்றது. - எம்.ஏ. நுஃமான்..
₹95 ₹100