Menu
Your Cart

பக்கத்தில் வந்த அப்பா

பக்கத்தில் வந்த அப்பா
-5 %
பக்கத்தில் வந்த அப்பா
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனப்பாடம், மதிப்பெண், தேர்வுகள் என்கிற அச்சில் சுழலும் நமது கல்விமுறை தரும் ஆயாசத்திலிருந்து தன் குழந்தைகளை விடுவிக்கவும், அவர்களுக்குச் சற்றே இளைப்பாறுதல் தந்து, புத்துயிர்ப்பளித்து, மீண்டும் நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் அவர்கள் களம் இறங்கவும், சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி நம்புவது கதைகளை. ஆண்டுதோறும் புதிய புதிய கதைகளைத் தொகுத்து மாணவ-மாணவியர்க்கு வழங்கி வருகிறது எஸ்.ஆர்.வி. பள்ளி. வகுப்பறையிலேயே கதை நேரமும் இணைக்கப்பட்டுள்ளது. நாம் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்கிற தன்னுணர்வைக் கதைகள் தருகின்றன. படித்து முடித்தபின் இப்படியான ஓர் உலகத்தில்தான் நாம் வாழப்போகிறோம் என்பதை இக்கதைகள் அறிமுகம் செய்கின்றன. இந்த உலகையும் பிரபஞ்சத்தையும் அறிந்து கொள்ளவும் அவற்றின் இயக்கங்களையும் பயணங்களையும் உட்கூறுகளையும் புரிந்துகொள்ளவும் எண்ணற்ற கருவிகளையும் எந்திரங்களையும் சூத்திரங்களையும் விதிகளையும் அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது. மூளை உள்ளிட்ட மனித உடலின் ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் கூட ஆயிரம் கண்டுபிடிப்புகள் உள்ளன. குணப்படுத்த பல்லாயிரம் மருந்துகள் மாத்திரைகள் உள்ளன. ஆனால்,மனித மனதில் நிகழும் அசைவுகள், துளிர்க்கும் அன்பு, பற்றி எரியும் வெறுப்பு, மூளும் பகையுணர்ச்சி, துரோகத்தின் கருநிழல், தியாகத்தின் பசுமை என மனங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றின் வழி மானுட உறவுகளைப் புரிந்துகொள்ளவும் நமக்கிருக்கும் ஒரே விஞ்ஞானம், ஒரே கருவி- கலை, இலக்கியம் மட்டுமே. அதிலும் குறிப்பாக எல்லா வடிவங்களுக்கூடாகவும் சாரமாக இருப்பது கதை, கதை மட்டுமே.
Book Details
Book Title பக்கத்தில் வந்த அப்பா (Pakkaththil Vantha Appaa)
Author ச.தமிழ்ச்செல்வன் (S. Tamilselvan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 160
Year 2016
Category சிறுவர் கதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பண்பாட்டுப் போராளி ஒருவரின் நாட்குறிப்பா அல்லது ஒரு எழுத்துக் கலைஞனின் தன்வரலாறா என வாசகனை மயங்க வைக்கும் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை தமிழ்ச்செல்வன் ஐந்து பாகங்களாகப் பிரித்திருப்பது சிறப்பான உத்தி. பிறந்து வளர்ந்த கிராமத்தின் பசுமை கலந்த நினைவுகளின் வழியே தானொரு கலை இலக்கியவாதியாக, பண்பாட்டுப் போரா..
₹190 ₹200
சாமிகளின் பிறப்பும் இறப்பும்அறிவொளி இயக்கத்தின் ஒருவித எளியமொழி வளத்துடன் நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகளை நமக்குச் சொல்லும் ச.தமிழ்ச்செல்வன் அதன் வாயிலாக, கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகளையும் எழுப்பிச் செல்கிறார்.இஸ்லாமிய, கிறிஸ்தவ நாட்டுப்புறக் கடவுளர்களையும் அது குறித்த பண்பாடு கலாச்சாரங்களையு..
₹67 ₹70
சந்தித்தேன்...ஒன்பது ஆளுமைகளின் நேர்காணல்களை வாசிப்பதன் மூலம் வாசகன் தமிழ்ச் சூழலின் சகல பாகங்களுக்குள்ளும் பிரவேசிக்கிறான், பங்கு கொள்கிறான், எதிர்வினைகள் புரிய ஆயத்தமாகிறான்...
₹57 ₹60
பிள்ளை பெற்ற பெரியசாமியின் கதை இது.பத்து மாதம் கருவைச் சுமந்து நடக்க முடியாமல் இடுப்பு வலியுடன் பிள்ளை பெற்றுக் கொள்கிற பெரியசாமி-யின் கதை.ஆண் இடுப்பு வலியால் துடித்தால் என்ன நடக்கும்?பிள்ளை பெற பெண் படும் பாட்டை ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு குழந்தை வடிவத்திற்கு ஓவியர் ராம்கி உயிர் கொடுத்துள்ளார்...
₹19 ₹20