Menu
Your Cart

இந்தியா: காலத்தை எதிர்நோக்கி

இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
-5 %
இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
யேன் மிர்தால் (ஆசிரியர்), வெ. கோவிந்தசாமி (தமிழில்)
₹523
₹550
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தப் புத்தகத்தை இதுநாள் வரை நீங்கள் படிக்காதவரா? இப்போதுதான் கையிலெடுத்துள்ளீர்களா? சரி, நல்லது. நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டீர்கள். படித்து முடித்த பின்பும் பல முறை இந்தப் புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படித்தே தீருவீர்கள். அப்படி என்னதான் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றது என்று கேட்கின்றீர்களா? இந்தப் புத்தகத்தை ஒரு பயண நூல் என்று வகைப்படுத்தலாம். ஆனால், இந்தியாவைப் பற்றி எழுதப்பட்டுள்ள எண்ணற்ற பயண நூல்களில் ஒன்று அல்ல இந்நூல் என்று உறுதியாகக் கூறமுடியும். இந்தியாவின் மீது மெய்யான அன்பு கொண்டுள்ள ஒரு மனிதர், சுமார் 30 ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பின், மிக நீண்ட பயணங்களுக்குப் பின், பல்லாயிரக் கணக்கான சந்திப்புகளுக்குப் பின் இந்தியாவின் உயிர்ப்பைப் புரிந்துகொண்டார். அப்புரிதலை, இந்தியாவின் கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும், எதிர் காலத்திலும் மேற்கொள்ளும் சமூக-வரலாற்றுப் பயணமாக இந்த நூலில் விவரித்துள்ளார். இந்த நூலைக் கையிலெடுத்துப் படித்து முடித்து பின்னர், அத்தகைய பயணத்தை மேற்கொண்ட மெய்யான அனுபவத்தை நீங்களும் பெறுவீர்கள் என்பது உறுதி. இவ்வளவு நாட்களாக நாம் பிறந்து வளர்ந்த நிலப் பரப்பை, மக்களை, சமூகங்களை, இவற்றின் வரலாற்றை இவ்வாறு ஏன் புரிந்துகொள்ளாமல் போய்விட்டோம் ? என்ற கேள்வி, இந்தப் புத்தக வாசிப்புக்குப் பின் உள்ளத்தில் எழாமல் இருக்கவே முடியாது. சாதிய மனநிலை உள்ளிட்ட உள்ளூர் ஆதிக்கப் போக்கு, காலனிய மனநிலை உள்ளிட்ட அயல் ஆதிக்க போக்கு ஆகிய எவற்றின் கறைப்படாமல் இந்தியப் பெருநிலப் பரப்பை உணர்ந்துகொள்வதற்கான திறவுகோல் இந்த நூலில் உள்ளது. இந்நூல் வாசிப்புக்குப் பின் அதை நீங்கள் உணர்ந்தே தீருவீர்கள். அதனால்தான் திரும்பத் திரும்ப இந்தப் புத்தகத்தை வாசிப்பீர்கள். நல்லது. பெரும் பயணத்துக்குத் தயார் ஆகிவிட்டீர்கள். வாழ்த்துகள்!
Book Details
Book Title இந்தியா: காலத்தை எதிர்நோக்கி (India Kaalaththai Ethirnokki)
Author யேன் மிர்தால் (Yen Mirdhaal)
Translator வெ. கோவிந்தசாமி (V. Govindha Samy)
Publisher சிந்தன் புக்ஸ் (Chinthan Books)
Pages 670
Year 2018
Category Marxism | மார்க்சியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

செய்யாத ஒரு கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க - அமெரிக்கரான முமியா அபு - ஜமாலின் சிறைக் குறிப்புகளை கொண்ட நூல்...
₹105 ₹110
இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய நிறுவனரான டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்கள் மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதத் திட்டமிருந்தார். 1954-இல் எனக்கு அம்பேத்கர் அளித்த ஒரு நேர்முகத்தில் தனக்கு மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை பற்றி ஒரு நூல் எழுதும் நோக்கம் இருப்பதாகச் சொல்லியிர..
₹380 ₹400