- Edition: 1
- Year: 2014
- Page: 138
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இராசகுணா பதிப்பகம்
சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை
மணிமேகலை, தமிழ்ச் செவ்விலக்கியப் பிரதிகளில் ஒன்று. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி எனும் முப்பெருங் காப்பியங்களில் ஒன்று. தமிழின் சிதைவுக்காகத் தன் தலையில் எழுத்தாணிகொண்டு குத்தி, சீழ்வரும்படி வாழ்ந்த சீத்தலைச்சாத்தனார் அவர்களால் அருளிச்செய்யப்பட்டது.
இவ்வாய்வு நூல் ஐந்து பகுதிகளைக்கொண்டு அமைகின்றது. மணிமேகலை; காப்பியத்தின் வழி மணிமேகலையின் வரலாற்றை அறிதல் என்பது முதல் பகுதி. பெளத்த சிந்தனைப் பள்ளியின் ஒட்டுமொத்த செயல் பாட்டையும் இப்பகுதியினூடாக அவதானிக்க இயலும்.
இந்திர விழாவின் பல்வேறு சமூக இயங்கியல் காரணத்தை விவாதிக்கிறது இரண்டாம் பகுதி. மூன்றாம் பகுதி மணிமேகலை காப்பியம் முழுக்க விரவிக்கிடக்கும் தத்துவக் கருத்துகளை எளிமையாகப் புரிந்து கொள்ளுவதாக அமைகின்றது.
நான்காம் பகுதி; ஒப்பிட்டுத்தன்மையிலும் விளக்கவியல் நிலையிலும் மணிமேகலையை ஆய்வதாக அமைகின்றது. சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றினோடு ஒப்பிடும் அவசியம் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. இறுதிப்பகுதி இடைக்கால உரையாசிரியர்களால் மணிமேகலைப் பிரதி பல்வேறு சூழல்களில் முன்னெடுத்து விளக்கப்பட்டுள்ள முறைமையை விளகுவதாக அமைகின்றது.
இப்படி மதுரை கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனாரின் காவியத்தினால் உள்ள சில ஆய்வுத் தளங்களையும் வரலாற்றையும் விளக்குவதாக அமைகின்றது இந்நூல்.
Book Details | |
Book Title | சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை (Chithalaisathanar Manimegalai) |
Author | கா.அய்யப்பன் (Kaa.Aiyappan) |
Publisher | இராசகுணா பதிப்பகம் (Rasaguna Pathipagam) |
Pages | 138 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |