-5 %
சாதி அடையாள சினிமா
Categories:
Cinema | சினிமா
₹209
₹220
- Year: 2017
- Language: தமிழ்
- Publisher: பேசாமொழி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகம் முழுக்க சினிமாக்களில் வெவ்வேறு வகைபாடுகள் உள்ளது. ஆனால் வேறெந்த தேசத்திலும் இல்லாத ஒரு புதுவகை சினிமா தமிழில் உள்ளது. அது சாதியை தூக்கிப்பிடிக்கும் வகையிலான சினிமாக்கள். தமிழ் சினிமாவில் சர்வசாதாரணமாக சின்னக் கவுண்டர், பெரிய கவுண்டர், நாட்டாமை, தேவர்மகன் என்று சாதி பெயர்களை தாங்கி வந்த படங்கள் ஏராளம். இவை சாதியின் பெயரோடு சாதிய அடையாளங்களையும் பெருமையாக பார்வையாளர்கள் மீது திணித்தது. விளைவாக தமிழ் சினிமா சாதிய வேறுபாடுகளை அங்கீகரிக்க ஆரம்பித்தது. சமூகத்தில் சாதியின் தீவிரத்தை, அதன் இருப்பை அதிகரித்தது. இன்னும் சில படங்கள் சாதிகள் தேவையில்லை என்று சொல்வதாக நினைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை திரையில் மறைமுகமாக அங்கீகரித்தன. அத்தகைய படங்களை இந்த நூல் அடையாளம் காட்டுகிறது. தமிழில் வெளியான திரைப்படங்களில் சாதிய அடையாளத்தை தாங்கி வந்த பெரும்பாலான படங்களையும், சாதியத்தை வேரறுக்கும், அதன் சுயபெருமையை பகடி செய்யும் சில படங்களையும் முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
Book Details | |
Book Title | சாதி அடையாள சினிமா (Saathi Adaiyaala Cinema) |
Publisher | பேசாமொழி (pesamoli) |
Pages | 0 |
Year | 2017 |