Menu
Your Cart

இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்

இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்
-10 %
இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்
₹261
₹290
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தனியார் மருத்துவமனைகளுக்குள் மருத்துவம் நாடி செல்லும்போது குறைந்தபட்சம் நோயாளியாக நமது உரிமைகள் என்னென்ன என்பதையாவது தெரிந்து வைத்துக்கொள்வது வீண் சிக்கல்களில் மாட்டாமல் நம்மை தற்காத்துக்கொள்ள உதவும். மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு சட்ட ரீதியாக உள்ள உரிமைகள் என்னென்ன என்று விளக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டதுதான் இந்த நூல். இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் நவீன மருத்துவத்தின்படி (Modern Medicine) நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கு மட்டுமின்றி, ஆயுர்வேதா, சித்த மருத்துவம், ஹோமியோபதி, யுனானி மருத்துவமுறைகளின் படி நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும். மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் எவ்வித பாரபட்சமும் இன்றி இவ்வுரிமைகள் இந்தியா முழுமைக்கும் பொருந்தும். இந்த நூலின் முதற்பதிப்பு 'பாரதி புத்தகாலயம்' வெளியீட்டில் 'தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் உரிமைகள்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு சூழலில் நோயாளிகளுக்கு மேற்கொண்டு வழங்கப்பட்டுள்ள இன்ன பிற உரிமைகளையும், மேலும் பல சட்டப்பிரிவுகளையும் சேர்த்து மெருகூட்டப்பட்ட இரண்டாம் பதிப்பு கிண்டில் மின்னூலாக பதிப்பிக்கப்படுகிறது இப்பதிப்பிற்கு 'அணிந்துரை' உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு அழகுமணி அவர்கள் எழுதியுள்ளார்கள். ஐயா அரிபரந்தாமன் ( ஒய்வு பெற்ற நீதிபதி- சென்னை உயர்நீதிமன்றம் ) அவர்கள் தனது முன்னுரையில், "இது போன்ற புத்தகம் ஏதும் இதுவரை தமிழில் வெளியிடப்படவில்லை எனவும் இப்புத்தகம் தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்தும்நாடி செல்பவர்களுக்கு - குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர பிரிவினருக்கு- மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
Book Details
Book Title இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள் (inthiyaavil noyalikalin urimaikal)
Author மரு.முகமது காதர் மீரான்
Publisher இதர வெளியீடுகள் (Other Publishers)
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha