Menu
Your Cart

காவிரிக் கரையில் அப்போது...

காவிரிக் கரையில் அப்போது...
-5 %
காவிரிக் கரையில் அப்போது...
தங்க.ஜெயராமன் (ஆசிரியர்)
Categories: தமிழகம்
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

காவிரிக் கரையில் அப்போது...

கட்டுரைகளில் இருப்பவை அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த காவிரிக் கரைப் பண்பாட்டின் விவரங்கள். அன்றைய எழுத்துலகில் உருவான காவியப் புனைவுகள் விலக்கிவைத்திருந்த பஞ்சைச் சங்கதிகள் இவை. 

இவற்றைக் கழித்து அந்தப் பண்பாட்டை முழுமையாக அறிய முடியாது. தமிழ்ச் சமுதாயம் இவற்றை மறக்க இருக்கும் நேரத்தில், ‘இப்படியெல்லாம் இருந்தது அப்போது’ என்று துவங்கும் விவரிப்புக் குரலின் தவிப்போடு, காவிரிப் படுகையின் வித்தார மொழியிலேயே பேசும் அனுபவச் சித்திரங்கள் இந்தக் கட்டுரைகள். அவர் காலத்து நினைவுகள் என்று விட்டேற்றியாக விமர்சிக்கும்படி கட்டுரைகளின் ஆசிரியர் இவற்றை விட்டுவிடவில்லை.

அன்றைய நினைவுகள் இன்றைய நிலவரத்தை விளித்து நடத்தும் செரிவான உரையாடலாகக் கட்டுரைகளை அமைத்திருக்கிறார் ஆசிரியர். காவியப் புனைவுகளை எழுதியவர்களோடு, எழுதியவற்றை அப்போது வாசித்தவர்களும் சமமாகப் பொறுப்பு ஏற்க வேண்டிய தமிழ்-எழுத்துலகக் குறைபாடு ஒன்றைக் களையும் முயற்சி இத்தொகுப்பு.

Book Details
Book Title காவிரிக் கரையில் அப்போது... (Kaveri karaiyil appothu)
Author தங்க.ஜெயராமன் (Thanga.Jeyaraaman)
ISBN 9789382394259
Publisher க்ரியா வெளியீடு (Crea Publication)
Pages 144
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஜனநாயகத்தைவிட அதிகம் பயன்படுத்தப்பட்ட, தவறாகவும் பயன்படுத்தப்பட்ட மற்றொரு அரசியல் சித்தாந்தம் ஏதுமில்லை. தற்போது, கிட்டத்தட்ட எல்லா ஆட்சிகளுமே தாங்கள், ஜனநாயக ரீதியிலானவை என்று உரிமை கொண்டாடுகின்றன. ஆயினும் எல்லா ‘ஜனநாயகங்களும்’ சுதந்திரமான அரசியல் என்ற வழக்க மெல்லாம் முழு ஜனநாயகக் குடியுரிமைகளுக்கு..
₹86 ₹90