-5 %
குற்ற விசாரணை முறைச் சட்டம் (CrPC)
வீ.சித்தண்ணன் Bsc, M.L., CC & IS (ஆசிரியர்)
₹570
₹600
- Edition: 1
- Year: 2018
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஜெய்வின் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், நான் அறிந்த வரையில், இங்கு ஆங்கில அறிவு கொண்டவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற எண்ணோட்டம் பரவலாக உள்ளது. நீதிமன்றங்களில் ஒரு வழக்குரைஞர் ஆங்கிலத்தில் வாதிட்டால், அவர் என்ன கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலேயே, அவர் திறமைசாலி மற்றும் புத்திசாலி என போற்றப்படுகிறார். பெரும்பாலான வழக்குரைஞர்கள் தமிழிலேயே நீதிமன்றத்தில் வாதிட விரும்புகின்றனர். ஆனால், அதற்குரிய அங்கீகாரம் மற்றும் ஊக்குவித்தல், அல்லது சரியான மொழிபெயர்ப்பு சட்ட நூல்கள் இல்லாததால், சரியான சட்டத்தமிழ் சொற்கள் கிடைக்காமல், அவர்கள் தமிழில் பேசவே தயங்குகின்றனர் .
அருகிலுள்ள இலங்கை நாட்டில், அனைத்து மேனிலைக் கல்விகளும், அதாவது மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் தமிழ்மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுவதாக நான் அறிகிறேன். இலங்கையால் அது இயலக்கூடியதாக இருந்தால், செம்மொழியாகிய தமிழ்மொழி தோன்றிய நம் தமிழகத்தில், அது எப்படி சாத்தியமில்லாமல் போகும்? சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டி, தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 348இன்படி, மத்திய அரசாங்கத்திற்கு 10 வருடங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தீர்மானமான முடிவு எதையும் மேற்கொள்ளாத மத்திய அரசாங்கம், அத்தீர்மானத்தை உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டு அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றமும், "தமிழை வழக்காடு மொழியாக உயர் நீதிமன்றத்தில் கொண்டுவர வேண்டுமென்றால், அதற்கு தமிழ்மொழியில் போதிய சரியான சட்ட நூல்கள் மற்றும் தீர்ப்புரைகள் உள்ளனவா? அதற்குரிய சரியான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனரா?" என்ற வினாக்களை எழுப்பி, வழிகாட்டும் ஆலோசனையை நிலுவையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.
வாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே இருந்தால்கூட, அவர் தனக்காக என்ன வாதிடுகிறார், எந்த வாதங்களை முன்வைக்கிறார் என அறிந்துகொள்ள இயலாமல், நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபின்பு, அவரது வழக்குரைஞர் கூறுவதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார்.
காவல் துறையினர், வழக்குரைஞர்கள், மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மட்டுமே சட்டங்களைத் தெரிந்துகொண்டால் போதுமானதன்று. நம்நாட்டின் அனைத்து சட்டங்களும் சாதாரணபொதுமக்களுக்கும் தெரிய வேண்டியது மற்றும் அதில் தெளிவு கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏதாவதொரு குற்றச்செயல் புரிந்ததில், சட்டப்படி அது குற்றமென்று எனக்குத் தெரியாது; தெரிந்திருந்தால் அக்குற்றத்தைச் செய்திருக்கமாட்டேன் என ஒருவர் நிலைப்பாடு கொண்டால், அந்த பொருண்மைத் தவறு, பிழைபொறுத்தலுக்கு உரியதன்று. எனவே, சாதாரண பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் வாதிகள், சட்ட மாணவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை அலுவலர்களும் சட்டத்தை முழுமையாக மற்றும் எளிதாகப் புரிந்துகொள்ள, தாய்மொழியாம் தமிழில் சரியான, எளிமையான சட்ட நூல்கள் வெளிவருவது, இன்றைய இன்றியமையாத தேவையாகும். ஏற்கெனவே வெளிவந்துள்ள சில சட்டத் தமிழ் நூல்களைப் போலல்லாமல், எவ்வித குழப்பம் மற்றும் பொருட்பிழைகள் ஏதுமின்றி, எளிய நடையில் சட்டத்தைக் கற்பதற்கு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தை உள்ளடக்கி அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடுவது, தீர்ப்பை வழங்குவது என நீதிமன்ற-மொழியாக தமிழ்மொழியைக் கொண்டுவருவதற்கு ஏதுவாக, 20 மாதங்களாக மிகுந்த சிரத்தை மேற்கொண்டு, இந்தியாவின் முப்பெரும் சட்டங்களான (1) இந்திய தண்டனைச் சட்டம், (2) குற்ற விசாரணை முறைச் சட்டம், (3) இந்திய சாட்சியச் சட்டம், மற்றும் (4) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றை பொருளில் பிழையேதும் இல்லாமல், மிகச் சரியான, எளிதில் சட்டத்தைப் புரிந்துகொள்ளும்படியான தமிழ் நடையில் மொழிபெயர்த்து, சட்டம் மட்டுமே கொண்ட மேற்கண்ட சட்ட நூல்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன.
.2018 வரையிலான அனைத்து குற்றவியல் சட்டத் திருத்தங்களையும் உள்ளடக்கியது இந்நூலின் சிறப்பம்சமாகும் .
Book Details | |
Book Title | குற்ற விசாரணை முறைச் சட்டம் (CrPC) (Criminal Procedure Code (CrPC)) |
Author | வீ.சித்தண்ணன் Bsc, M.L., CC & IS (Vee.Siththannan Bsc, M.L., Cc & Is) |
Publisher | ஜெய்வின் பதிப்பகம் (Jeywin Publications) |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Law Books | சட்டப் புத்தகங்கள், Essay | கட்டுரை |