-10 %
தூவி
பா.சதீஸ் முத்து கோபால் (ஆசிரியர்)
₹81
₹90
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உரைநடை செய்ய முடியாததை ஒரு கவிதை செய்து விடும். நமது சுதந்திரப் போராட்ட்த்திலும் கவிதை இலக்கியம் தன் பங்களிப்பை செய்த்தது. பாரதியையும் நாமக்கல் கவிஞரையும் யார் மறக்க முடியும்?
பறவைகளை பல்லாண்டுகளாக கூர்ந்து அவதானித்தனின் பயனாக புள்ளின்ங்களின் பல பரிமாணங்களை இந்த கவிதை தொகுப்பில் நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்த நூலாசிரியர் சதீஷால் முடிகின்றது அவைகளைன் தோற்றப்பொலிவு, வாழ்விடங்கள், இயல்புகள் கவிதைகளில் வெளிப்படுகின்றன. கொடிக்கால் வாலாட்டி குருவி, தனது வாலை பக்கவாட்டில் அசைப்பதை பதிவு செய்கின்றார். நாம் அரிதாக பார்க்க்க்கூடிய கள்ளிக்குயிலின் சிவப்பு அலகை வர்ணிக்கின்றார்.. சில பறவைகளின் .காண அரிதான சில நடவடிக்கைகளைப்பற்றி எழுதின்றார் .murmuration என்று பறவையியலாளர்கள் குறிப்பிடும் செயல்பாட்டை
” ஓராயிரம் சோளக்குருவிகள்
ஒருங்கிணைக்கும் அழகு நடனம்
இயற்கையின் அற்புதம்”
என வர்ணிக்கின்றார். அதே போல பல பறவைகளை சரியான பெயர் சொல்லி அறிமுகப்படுத்துகின்றார். புள்ளினம், விலங்கினம் இவற்றின் பெயர்களில் பெருங்குழப்பம் நிலவும் தமிழ்ச்சூழலில் இது வரவேற்கத்தக்கது.
தமிழ் பசுமை இலக்கியத்திற்கு சதீஷின் பங்களிப்பான இந்த தூவி நூல் புறவுலகில் அக்கறை காட்டும் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என வாழ்த்துகின்றேன். சிறப்பாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இது சென்று சேர வேண்டும்.
-தியடோர் பாஸ்கரன்
பறவைகளை கவிதையாக்குவதும், கவிதையை பறவைகள் ஆக்குவதும் கொஞ்சம் சிக்கலான, நுட்பமான பணிதான்! அப்பணியை அறிவியலோடும், அவதானிப்போடும் செய்திருக்கும் சதீசு முத்து கோபாலை முதலில் வாழ்த்துவோம்!
-கோவை சதாசிவம்
Book Details | |
Book Title | தூவி (thoovi) |
Author | பா.சதீஸ் முத்து கோபால் |
Publisher | காக்கைக் கூடு பதிப்பகம் (crownest publication) |
Published On | Feb 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |