Menu
Your Cart

தலித் அரசியல் (நாற்பது ஆண்டுகால நோக்கும் போக்கும்)

தலித் அரசியல் (நாற்பது ஆண்டுகால நோக்கும் போக்கும்)
-5 %
தலித் அரசியல் (நாற்பது ஆண்டுகால நோக்கும் போக்கும்)
அ.மார்க்ஸ் (ஆசிரியர்)
₹470
₹495
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உருவாகியிருந்த மாற்றுப் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகளின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான உலக அரசியல்-பொருளாதார மாற்றங்களில் ஒன்று அடையாள அரசியல். இனி அரசியல் என்பது பண்பாட்டின் அடிப்படையில்தான் அமையும் என சாமுவேல் ஹட்டிங்டன் போன்றோர் முழங்கும் நிலை ஏற்பட்டது. சாதி மற்றும் தீண்டாமைக் கொடுமைகளின் களமாக இருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் அது தலித் அரசியலாக வடிவு பெற்றது. தமிழக வரலாற்றில் சாதியத்திற்கு எதிரான குரல்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. நவீன உலகில் அதற்கான கோட்பாட்டு வடிவத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தம் செயற்பாடுகளின் ஊடாகவும், எழுத்துக்களின் ஊடாகவும் நமக்குத் தந்துள்ளார். இந்தப் பின்னணியில் தமிழகத்தில் உருவான தலித் எழுச்சியுடன் இணைந்து நின்று கோட்பாட்டு உருவாக்கம், களச் செயல்பாடு எனக் கடந்த கால் நூற்றாண்டுகளாகச் செயல்பட்டு வரும் அ. மார்க்சின் 51 கட்டுரைகள், இரு முன்னுரைகளுடன் உருவாகியுள்ளது இந்த நூல். இதே கால கட்டத்தில் அ. மார்க்ஸ் தலித் மக்களின் மீதான வன்முறைகளின் போது உண்மை அறியும் குழுக்கள் அமைத்து பல அறிக்கைகள் வெளியிட்டிருக்கும் நிலையில், இந்தப் புத்தகம் கடந்த ஒரு நூற்றாண்டுகால தமிழக தலித் அரசியலின் ஏற்ற இறக்கங்கள், கோட்பாட்டு விவாதங்கள் ஆகியவற்றுக்கான ஒரு முக்கிய ஆவணமாக அமைகிறது.
Book Details
Book Title தலித் அரசியல் (நாற்பது ஆண்டுகால நோக்கும் போக்கும்) (Dalit Arasiyal)
Author அ.மார்க்ஸ் (A.Marx)
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 528
Published On Nov 2021
Year 2022
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Dalitism | தலித்தியம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

குற்றம் தண்டனை மரண தண்டனைஅஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன.தூக்கிலிடப்படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் துன்புற..
₹95 ₹100
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை இந்திய வரலாற்றில், குறிப்பாக சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை. இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்க வில்லை. பல்வேறு சிற..
₹143 ₹150
கால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி ​​​கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் ..
₹95 ₹100
கல்விச் சிந்தனைகள் பெரியார்கல்வியின் பயன்பாடுகளை “இரண்டு முக்கிய விஷயங்களை” பெரியார். குறிப்பிடுகிறார். “ஒன்று கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மற்றொன்று மேன்மையான வாழ்வுக்கு தொழில் செய்யவோ, அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.”..
₹124 ₹130