-4 %
என் பாதங்களில் படரும் கடல்
தமயந்தி (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2024
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
மழைக்காலத்தில் கையில் தேநீர்க் கோப்பை ஜன்னல் ஓர ரசனையின் இதம் தமயந்தியின் என் பாதங்களில் படரும் கடல். கனவில் தொடங்கும் கவிதைத் தளம் தனி கற்பனை உலகின் திறவுகோல்.
இந்த புத்தகத்தின் பயணம் ஓவ்வொருவரின் இதமான தொலைந்த ஞாபகங்களை விசாரித்துவிட்டு ஒரு தோளும் கொடுக்கும் அனுபவம். உணர்வுகளை பிம்பமாக்க கவிதைகளால் மட்டுமே முடியும். அதை சில வரிகளைக் கொண்டே சிறப்பாக நம்மை வந்து அடைந்து இருக்கிறது இந்த தொகுப்பு. நிறைவதையும் கரைவதையும் உணர்வுபூர்வமாகக் கடத்தியிருக்கிறார்.
இவரின் பேனா முனை அனுபவச் சிதறல்களைத் திகட்ட திகட்ட உதிர்த்து இருக்கிறது கவிதைகளாக. வாழ்க்கையே எதார்த்தம்தானே? அதே பணியில் கவிதை கிடைக்கும் பொழுது அது அதன் தன்மையை மென்மையாக நம்மிடம் விசாரிக்கும்தானே.
மனிதர்களின் நினைவுகளைத் தொட்டுப் பார்க்க ஒரு தனி பிராயச்சித்தம் தேவைப்படுகிறது. நினைவுகள் தனிப்பட்டவை, மனித வரையறைக்குள் அது ஒரு தனி சடங்கு. தனக்கென்று ஒரு தனி விதியை விதித்துக்கொள்ளும். ஒவ்வொரு மனிதருக்கும் விதவிதமான வர்ணஜாலத்தைக் காட்டுகிறது நினைவு. நினைவுகளின் வழியை அறிவித்து அதற்கு இறுதியில் முகவரியும் கொடுத்து இருக்கிறார் கவிஞர்.
படர்ந்த அந்தக் கடலின் ஒரு முனையில் நனைந்து இருக்கும் வாசகர்களின் ஈரம், அது ஏற்படுத்திய நினைவலைகள் ஒரு சுகானுபவம்.
- சரயுராகவன்
Book Details | |
Book Title | என் பாதங்களில் படரும் கடல் (En Pathangalil padarum kadal) |
Author | தமயந்தி (Dhamayanthi) |
Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, 2024 New Releases |