Menu
Your Cart

சுபிட்ச முருகன் - எதுவாக? எதுவாகவோ, அதுவாக?

சுபிட்ச முருகன் - எதுவாக? எதுவாகவோ, அதுவாக?
-5 %
சுபிட்ச முருகன் - எதுவாக? எதுவாகவோ, அதுவாக?
சரவணன் சந்திரன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

சுபிட்ச முருகன் (எதுவாக? எதுவாகவோ, அதுவாக? )- சரவணன் சந்திரன் :

இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது, அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குதே புனைவின் கலை, இது வாழ்க்கையின் முடிச்சுகளைப் பேசும் படைப்பு. மட்டுமல்ல, அப்பால் சென்று ஒட்டுமொத்த வினாவில் தலையை ஓங்கி அறைந்துகொள்வதும்கூட எப்போதும் நான் புனைவில் எதிர்பார்க்கும் கூறு இது,

"எப்பிடிப் பொத்தி வச்சாலும் அவ வந்து கொத்திருவா" என்ற வரியிலிருந்து இந்தாவலை நான் மறுதொகுப்பு செய்யத் தொடங்கினேன், ஒரு தொடுகை கருவிலிருக்கும் குழந்தையை வந்து தொடும் புறவுலகு போல. அது ஓர் அழைப்பு, ஏவாளை லூசிஃபர் என, தாந்தேயை ஃபியாட்ரிஸ் என இருண்டபாதைகளினூடாக அழைத்துச் செல்கிறது விழுந்து எழுந்து புண்பட்டு சீழ் கொண்டு கண்ணீரும் கதறலுமாக ஒரு நீண்ட பயணம். 'வட்டத்தின் ஓரமாகத் தவழ்வதைத் தவிர வேறு எதுவும் அப்போது எனக்கு விதிக்கப்படவில்லை" என்னும் பெருந்தவிப்பு.

Book Details
Book Title சுபிட்ச முருகன் - எதுவாக? எதுவாகவோ, அதுவாக? (subitcha-murugan)
Author சரவணன் சந்திரன் (Saravanan Chandran)
ISBN 9789386555557
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 0
Published On Oct 2018
Year 2018
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ரோலக்ஸ் வாட்ச்(நாவல்) - சரவணன் சந்திரன் :சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய இளைய தலைமுறையினரை மூன்று பெரும் தலைமுறைகளாக பிரிக்கலாம். சுதந்திரத்திலிருந்து 70கள் வரை இலட்சியவாதத்தின் காலம். 70 கலிலிருந்து 90 கள் வரை இலட்சியவாதங்கள் முறிந்து நிராசையும் தனிமையும் அன்னியமாதலும் நிரம்பிய காலம், அதுவே பல்வ..
₹190 ₹200
பார்பி(நாவல்) - சரவணன் சந்திரன் :மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி, விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மைதானம் தன் மைந்தர்களை மடியில் மடித்துப் போட்டுச் சீராட்டுகிறது. தள்ளிக் கிடத்தித் தண்டிக்கிறது. மனம் திருந்திய மைந்தனாய்த் திரு..
₹190 ₹200
வெண்ணிற ஆடை(நாவல்) - சரவணன் சந்திரன் :சாம்பல் உலகில் உலவும் மனிதர்கள் இவர்களென ஒரு வரியில் கடந்துவிடமுடியாது. வாழ்க்கையை அதன் அத்தனை பரிமாணங்களின் வழியாகவும் வாழ்ந்து பார்த்தவர்கள் இவர்கள். நெடுஞ்சாலைப் பயணத்திற்குத் தேவையான வேகத் தடைகளும் கூட இவர்களே...
₹181 ₹190
எக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது...
₹309 ₹325