Menu
Your Cart

தங்கர்பச்சான் கதைகள்

தங்கர்பச்சான் கதைகள்
-5 % Out Of Stock
தங்கர்பச்சான் கதைகள்
தங்கர் பச்சான் (ஆசிரியர்)
₹323
₹340
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர் பச்சான், மண்ணை விட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர். மனது கனக்கக் காட்சிப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது தங்கர் பச்சானின் உலகம். அவை இல்லாமல்போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வலியும் படிந்த கதைகளும் காட்சிகளும் அவரை மண்சார்ந்த கலைஞராக வைத்திருக்கின்றன. மரபைப் பற்றிய ஏக்கம்,மரபுகள் தமக்குள்ளாகப் பொதிந்து வைத்திருக்கும் வன்முறைகள் இரண்டையும் ஒரே தளத்தில் பதிவு செய்துவிடுபவை இவரது கதைகள். காட்சிக்கலையின் நிர்ப்பந்தங்கள் மறுத்த எளிமையின் வழியே நுட்பமான அழகுகளையும் ஊடகங்களால் மறக்கப்பட்ட மனிதர்களையும் பதிவு செய்துவிடுபவை இவரது கதைகள். காட்சிக்கலையின் நிர்பந்தங்கள் மறுத்த எளிமையின் வழியே நுட்பமான அழகுகளையும் ஊடகங்களால் மறக்கப்பட்ட மனிதர்களையும் பதிவு செய்யப் பயின்ற இக்கலைஞனுக்கு கதை சொல்வதன் வழியே தன்னை ப் புதுப்பித்துக்கொள்ள முடிகிறது.ஒளிப்பதியும் மொழிப்பதிவும் ஊடாடும் இவரது கதைப்பரப்பில் இன்னும் இன்னும் சொல்லப்பட வேண்டிய மண்ணின் கதைகள் நினைவூட்டப்படிகின்றன.
Book Details
Book Title தங்கர்பச்சான் கதைகள் (Thangar bachan kathaigal)
Author தங்கர் பச்சான் (Thangar Pachchaan)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Edition 1
Format Paper Back
Category சிறுகதைகள் / குறுங்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின் நூல் வடிவம். "சிறந்த ஒளிப்பதிவாளர், திரை இயக்குநர் மற்றும் இலக்கியவாதியான தங்கர் பச்சான் ஒரு பன்முகக் கலைஞர். அவரைப் பிடிக்காதவர்கள..
₹295 ₹310