Menu
Your Cart

தனிமையில் ஒரு கோயில்

தனிமையில் ஒரு கோயில்
-5 % Out Of Stock
தனிமையில் ஒரு கோயில்
ஜி.நாகராஜன் (ஆசிரியர்)
₹152
₹160
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பதினாறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள், இடங்கள், சம்பவங்களே இக்கதைகளிலும் காணக் கிடைக்கின்றன. எந்தவிதமான அலட்டலுமற்ற இயல்பான நடை ஒவ்வொரு கதைக்கும் உயிர்ப்பைத் தந்திருக்கிறது. நூலுக்குத் தலைப்பு கொடுத்த 'தனிமையில் ஒரு கோயில்' சிறுகதையில் குல தெய்வ வழிபாட்டுக்காக கோயிலுக்குச் செல்லும் ஒருவர் பஸ் கண்டக்டர் தர வேண்டிய மீதிச் சில்லறையைத் தராததால் கோபமடைகிறார். கோயிலில் வழிபாடு செய்வதற்குத் தேவையான எலுமிச்சம் பழங்களை வாங்காததால், அவற்றைப் பக்கத்துத் தோட்டத்தில் பறித்துத் தந்த சிறுவனுக்கு சன்மானமாக ஐந்து ரூபாயைத் தருகிறார். அந்தச் சிறுவன், அதை கோயில் உண்டியலில் போடுகிறான். அந்தச் சிறுவன் பஸ்ஸில் தன்னை ஏமாற்றிய கண்டக்டரின் மகன் என்பதும், கண்டக்டர் அந்தச் சிறுவனின் தாயை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை மணமுடித்திருப்பதும் தெரிய வருகிறது. 'குலதெய்வ வழிபாட்டுக்குச் செல்வது' என்ற மையமான பொருளைச் சுற்றியே கதை சூழலாமல் புதியமுறையில் கதை சொல்வது நிகழ்கிறது. 'உண்மைகள் சுடுவதுண்டு' சிறுகதையில் வரும் ஆண்டர்ஸன் என்னும் ஆங்கிலேயர், இந்நாட்டு மக்களின் மனதில் ஊன்றப்பட்டிருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியின் மீதான வெறுப்பு விதைகளை, தனது பேச்சால் அழிப்பதோடு, மாற்று வழிகளையும், இன்றைய நிலைமைகளையும் சுட்டிக்காட்டுகிறார். வித்தியாசமான கருப்பொருள்களும், இயல்பான சித்திரிப்பும் இந்நூலை குறிப்பிடத் தக்கதாக்குகின்றன.
Book Details
Book Title தனிமையில் ஒரு கோயில் (Thanimaiyil Oru Koyil)
Author ஜி.நாகராஜன் (G.Nagarajan)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 0
Year 2018
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

என்னமோ வாழ்க்கை, வாழ்க்கை என்று கதைக்கிறீர் களே, என்னமோ உறவு, பாசம் என்று கதைக்கிறீர்களே, என்னமோ காதல், பாலுறவு என்று கதைக்கிறீர்களே என்னமோ குடும்பம் என்று கதைக்கிறீர்களே இதுதானய்யா அவை . . . இவற்றின் லட்சணத்தைப் பாருங்கள் என்று நம்முன் ஓர் உலகை விரித்துக் காண்பிக்கிறார் ஜி. நாகராஜன்...
₹166 ₹175
இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்ப..
₹185 ₹195
தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டு வந்து தள்ளும் ஆபாசத்திலிருந்து முற்றிலும் மாறான கலைப் படிவங்கள் ஜி. நாகராஜனின் கதைகள். பச்சைக் கதைகளும்  சிவப்புக் கதைகளும் படித்துப் பழக்கமானவர்களுக்கு ஜி. நாகராஜன் முற்றிலும் மாறுபட்ட, ஜீரணிக்க முடியாத எழுத்தாளராக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இப்படி இருப்பதுதான் அவரி..
₹133 ₹140
நவீன தமிழிலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளிகளில் ஒருவர் ஜி. நாகராஜன். புதிதாக ஒன்றை எட்டிப் பிடிப்பதற்கான ஆவேசம் இவருடைய படைப்புகளின் அடிப்படையான கூறு. தமிழ்க் கதையுலகின் மையத்தில் இடம்பெறும் பாத்திரங்களை விளிம்புக்குத் தள்ளும் இவர் விளிம்புநிலையிலுள்ள மனிதர்களை இயல்பாக மையத்திற்குக் கொண்டுவருகிறார..
₹608 ₹640