- Edition: 1
- Year: 2016
- ISBN: 00017590
- Page: 368
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து மிக ஆழமானது. அது மனித மனதை நுட்பமாக ஆய்வு செய்கிறது. தேர்ந்த உளவியல் மருத்துவரை போல நமது வேதனையின் ஆதாரப் புள்ளிகளை தேடி கண்டுபிடிக்கிறது. கடவுளும் மதமும் மனிதர்களை ஆறுதல் படுத்த போதுமானதாகயில்லை என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி...... தஸ்தயேவ்ஸ்கியின் கேள்விகள் எளிமையானவை. குடும்பம் எதன் அச்சில் சுழன்று கொண்டிருக்கிறது. பெண்கள் ஏன் ஆண்களை நம்புகிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதன் உண்மையான காரணத்தை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா? அடுத்த மனிதன் ஏன் எப்போதுமே நம்மை புரிந்து கொள்ள மறுக்கிறான்? காரணமில்லாமல் ஒரு மனிதன் மற்றவனை ஏன் காயப்படுத்துகிறான்? காதல் என்பதை எப்படி புரிந்து கொள்வது?
அவமானப்படுத்துவதில் மனிதர்கள் ஏன் சந்தோஷம் கொள்கிறார்கள். வறுமையும் நெருக்கடியும் மனிதனின் சுபாவத்தை மாற்றிவிடுமா? குற்றமும் தண்டனையும் மனித உடலின் மீதே ஏன் தன் கவனத்தை செலுத்துகிறது என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்விகள் வாழ்விலிருந்து உருவானவை......
இதுவரை நான் வாசித்த புத்தகங்களில் மிகச்சிறந்த காதல்கதையாக தோன்றுவது மூன்று கதைகள் மட்டுமே. மூன்றுமே ரஷ்ய எழுத்தாளர்கள் எழுதியது. அதில் முதலிடம் தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்...
Book Details | |
Book Title | தஸ்தயேவ்ஸ்கி கதைகள் (dostovesky kathaikal) |
Author | தஸ்தயேவ்ஸ்கி/Fyodor Dostoevsky |
ISBN | 00017590 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 368 |
Published On | Jan 2016 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு |