Menu
Your Cart

எரி

எரி
-5 %
எரி
நாகபிரகாஷ் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாகபிரகாஷின் இத்தொகுப்பிலுள்ள கதைகளின் சரடாக அமைந்திப்பது சிறுவர்களின் உலகம். இளமையில் உழைக்க நேர்ந்தவர்களின் மனக்கோலங்களும் அவற்றின் வெவ்வேறு திரிபுகளுமே கதைகளாக அனுபவமாகியுள்ளன. பதின்பருவத்தின் துயர்பாடுகளைச் சொல்லும் நாகபிரகாஷின் கதைகள் எளிமையான மொழியில் அடர்த்தியாகவும் சொல்நேர்த்தியுடனும் அமைந்திருப்பவை. அனுபவங்களின் உண்மைத்தன்மை கதைகளுக்கு பலம் சேர்த்துள்ளன. சித்தரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பலவும் தமிழ் சிறுகதையில் சொல்லப்படாதவை என்பதும் கவனிக்கத்தக்கது. ஒன்பது கதைகளுமே வாழ்வின் பல்வேறு தருணங்களை முன்னிறுத்துபவை. ஒருவகையில் ஒரே வாழ்வின் வெவ்வேறு காட்சிகளை சித்தரிப்பவை. பாசாங்குகள் எதுவுமில்லாமல் மிகையான விவரிப்புகளோ உரையாடல்களோ இல்லாமல் நேரடியாக சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் அவை வாசகனுக்கு நெருக்கமானவையாய், தான் கண்ட வாழ்வின் சில கணங்களை நினைவுறுத்துவதாய், தன் அனுபவத்தின் சில துளிகளை மீட்டுத் தருவதாய் அமையக்கூடும். அதுவே இக்கதைகளின் வரவுக்கு நியாயம் செய்வதாக இருக்கும். - எம்.கோபாலகிருஷ்ணன்
Book Details
Book Title எரி (Eri)
Author நாகபிரகாஷ்
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha