Menu
Your Cart

ஈழம்: எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்

ஈழம்: எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்
-5 %
ஈழம்: எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்
Categories: Eezham | ஈழம்
₹523
₹550
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆயுதப் போராட்டம் விடுதலை அரசியலின் உச்சகட்ட புரட்சிகர வடிவம் எனக் கருதப்படுகிறது. மானுட மீட்சிக்காகத் தன்னை இழத்தல் எனும் உன்னதம் இங்கு நடைமுறையாகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் அனுபவங்களுடனும் நினைவுகளுடனும் கலந்துவிட்டிருக்கிறது. தமிழ் அரசியல், கலாச்சாரம், இலக்கியம், தத்துவம், இதுவரைத்திய தமிழ் இடதுசாரி மரபு அனைத்தையும் ஈழ விடுதலைப் போராட்டம் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. ஈழப் போராட்டம் நந்திக்கடலில் வஞ்சகமாக அழிக்கப்பட்டிருந்தாலும், அதனது வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, மானுட சுயதரிசனங்களையும் அரசியல் சுயவிமர்சனங்களையும் அது எழுப்பியபடியே இருக்கிறது. உலக தேசிய விடுதலைப் போராட்ட மரபின் பின்னணியில் ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்யும் இக்கட்டுரைகள், இன்றைய சர்வதேசிய அரசியல் சூழலில் எதிர்ப்பு அரசியலின் எதிர்கால வடிவம் எத்தகையதாக இருக்க முடியும் எனும் தேடலையும் மேற்கொள்கிறது. தமிழகம் புகலிடம் எனும் முப்பெரும் பிரதேசங்கள் சார்ந்த எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, பொதுவான எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்துக்குமான விமர்சன அரசியலை அவாவியே இக்கட்டுரைத் தொகுப்பு உங்களின் முன் வருகிறது.
Book Details
Book Title ஈழம்: எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் (Eezham Ethirppu Arasiyalin Ethirkaalam)
Author யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
ISBN 9788177201772
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 692
Year 2012
Category Eezham | ஈழம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹200 ₹210
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெ..
₹285 ₹300
பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்..
₹143 ₹150