Menu
Your Cart

எலான் மஸ்க் : மனித சக்தியின் எல்லைகளை விரிவுபடுத்தும் எந்திரன்

எலான் மஸ்க் : மனித சக்தியின் எல்லைகளை விரிவுபடுத்தும் எந்திரன்
-5 %
எலான் மஸ்க் : மனித சக்தியின் எல்லைகளை விரிவுபடுத்தும் எந்திரன்
₹200
₹211
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பசித்த மானுடத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ’மாற்றம்’ என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம். அப்படி பெரும்பான்மை போக்கை நிர்ணயித்த மாற்றத்தின் முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு அடையாளங்களைத் தாங்கி நிற்கின்றனர். அவர்களை தனி ஒருவனின் ’ஆசை’யைத் தூண்டி ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியவர்கள், சமூகத்தின் சமநிலை கருதி ஆசையை கட்டுக்குள் வைக்கக் கற்றுக்கொடுத்தவர்கள் என்று இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்திவிடலாம்.அப்படி முதல் தரப்பினரில் ஒருவர் ’உலகமயம்’ என்னும் மந்திரக்கோலை நீட்டி ஒவ்வொருமுறை ‘வளர்ச்சி’ என்ற சொல்லை வெவ்வேறு காலகட்டங்களில் உச்சரித்தபோதும் புதிய வஸ்துகள் தோன்றின. ஆனால் இரண்டாம் தரப்பினர்கள் கணித்ததைப்போல் அவற்றின் மறுசுழற்சிக்கு வடிகால் இல்லாததால் இதுவரை அழிவிற்குப் பயன்படாத அறிவியல் கண்டுபிடிப்பு என்று எதுவுமே மிஞ்சவில்லை என்பதுதான் சாபக்கேடு. ’ஆசைகளையும் துறக்காமல், அழிவையும் விதைக்காமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல விளைவுகளை மட்டுமே தரக்கூடிய மாற்றங்கள் சாத்தியமா?’ என்று தேடத்துவங்கியவர் ஜிப்2, பே-பால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பணி, ஹைப்பர்லூப், ஓப்பன் ஏஐ, சோலார் சிட்டி, கிகா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்களை வளர்த்தெடுத்தார். அவர் பெயர்தான் எலான் மஸ்க்! எலான் மஸ்க்கின் வாழ்வின் வழியாக, அவரது சாதனைகள் ஊடாக, அவரது இலக்குகளை எட்டும் பயணத்தின் பலனாக நாம் என்ன பெறப்போகிறோம் என்றால் அவரது முயற்சிகள் எல்லாம் வெற்றிபெற்று ஒன்றோடொன்று தொடர்புகளை ஏற்படுத்தி இணையும் புள்ளியில் உலகமே ’எலான்மயம்’ ஆகியிருக்கும். அதில் நாம் என்ன செய்துகொண்டிருப்போம்? என்ற பருந்துப்பார்வை தரிசனம்தான் இந்தப் புத்தகம்!
Book Details
Book Title எலான் மஸ்க் : மனித சக்தியின் எல்லைகளை விரிவுபடுத்தும் எந்திரன் (Elon Musk)
Author கார்த்திக் ஸ்ரீநிவாஸ் (Kaarththik Srinivaas)
ISBN 9789387369054
Publisher சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixthsense Publications)
Pages 0
Year 2019
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மர்மயோகி நாஸ்டிரடாமல்சிந்திக்கத் தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர். புறத்தோற்றங்கள், குணாதிசயங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதன் சக மனிதனிடமிருந்து வேறுபடுகிறான். தன் சிந்தனையின் தீர்க்கம், தன் சந்ததியினரின் மேல் அவை ஏற்பபடுத்திய தாக்கம் போன்ற காரணிகளால் மனிதன் காலத்தை வென்ற ஞானியாக, கடவுளாக வா..
₹316 ₹333
இல்லுமினாட்டிநம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நா..
₹211 ₹222