
New
-5 %
இரவாடிய திருமேணி
வேல்முருகன் இளங்கோ (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹664
₹699
- Edition: 1
- Year: 2025
- ISBN: 978-81-19576-87-6
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வேல்முருகன் இளங்கோவின் இந்நாவலை காவியம் அல்லது எதிர்-காவியம் என்ற வகைமையில் நிறுத்தலாம். வாழ்வு குறித்து நாம் ஒருபோதும் விடை காணமுடியாத கேள்விகளோடு, அதிகாரம் காரம், உறவு, இருப்பு, மரணம் ஆகியவற்றை அடி பொருளாகக் கொண்டு மதுரை மற்றும் மேற்கு மலைக் காட்டின் பின்னணியில் நாவல் விரிகிறது.
கடந்த காலத்தை இரண்டாம் ஜாமம், குறு வாள், உப்பரிகை, சாமரம் போன்ற சொற் சேர்ப்பு விளையாட்டுகளில் நிகழ்த்தி விட முடியாது. படைப்பாளி தன்னைக் கரைத்து அந்த காலத்திற்குச் செல்ல வேண்டும். இதை எழுதிய ஆண்டுகளில் வேல்முருகன் இளங்கோ தன் வீட்டிற்கு ஒவ்வொரு இரவிலும் குதிரையிலேயே திரும்பியிருப்பார் என நம்புகிறேன்.
நாவலில் இரவாடிய திருமேனி எனும் காவியத்தை இயற்ற வந்தவன் தன் காவியத்திற்குள்ளேயே ஒரு பாத்திரமாய் சிக்கிக் கொள்வதைப் போல் நாமும் அதன் மொழி அழகிலும், அது எழுப்பும் ஆதாரமான, உணர்வுப்பூர்வமான கேள்விகளின் வழி சிக்கிக் கொள்கிறோம். அதுவே இரவாடிய திருமேனியை தமிழின் மிக முக்கியப் படைப்புகளில் ஒன்றாக ஆக்குகிறது.
Book Details | |
Book Title | இரவாடிய திருமேணி (இரவாடிய திருமேணி) |
Author | வேல்முருகன் இளங்கோ |
ISBN | 978-81-19576-87-6 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Year | 2025 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Novel | நாவல் |