Menu
Your Cart

புலிப்பானி ஜோதிடர்

புலிப்பானி ஜோதிடர்
-5 %
புலிப்பானி ஜோதிடர்
காலபைரவன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மன இயக்கத்தின் சிக்கலான திசைகளைச் சித்தரிக்கும் முயற்சிகளாக காலபைரவனின் சிறுகதைகளைச் சொல்லவேண்டும். அதுவே அவருடைய கதைக்களம். சிக்கலின் தன்மையைச் சொல்வதற்குப் பொருத்தமாக பல தருணங்களில் இறந்தகாலமும் நிகழ்காலமும் இவருடைய படைப்புகளில் மாறிமாறி இடம்பெற்றிருக்கிறது. கச்சிதமான மொழியின் வழியாக, அந்தக்காலமாற்றத்தை எவ்விதமான சிக்கலுக்கும் இடமின்றி மிகவும் திறமையுடன் கையாள்கிறார் காலபைரவன். ஒருபுறம் மனவியக்கத்தின் புதிரைக்கண்டு திகைத்து அல்லது தத்தளித்து நிற்கும் மனிதர்கள். இன்னொருபுறம் ஐதீகமாக அல்லது நம்பிக்கையாக நிலைத்துவிட்ட மனவியக்கத்தின் புதிரை தன்னுடைய கோணத்தில் விடுவிக்கும் அல்லது வேடிக்கையாக அம்பலப்படுத்தும் மனிதர்கள். காலபைரவனுடைய கதைக்களன் என்னும் வகையில் நிரந்தர அடையாளத்தை நிறுவுவதற்கு இம்மனிதர்கள் உதவுகிறார்கள் என்று சொல்லலாம். காலபைரவன் தன்னுடைய படைப்பூக்கத்தின் விளைவாக இத்தகு மனிதர்களின் கச்சிதமான சித்திரங்களை தம் படைப்புகளில் தீட்டிவிடுகிறார். அவருடைய கலைத்திறமை இப்பின்னணியில் செறிவான வகையில் வெளிப்படுகிறது. - பாவண்ணன்
Book Details
Book Title புலிப்பானி ஜோதிடர் (Pulippaani Jothidar)
Author காலபைரவன் (Kaalapairavan)
ISBN 9789387333468
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 144
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நிகழ்ந்த நிஜம், எதார்த்தமான வரலாறு என்பதுபோலச் சொல்லப்படும் கதைகளின் பின்னிருக்கும் கற்பிதத்தைக் கலைத்துப் பார்ப்பதன் வழியாக உருவாகும் அபத்தத்தை நகையுணர்வுடன்கூடிய மொழியில் முன்வைப்பவை காலபைரவனின் கதைகள். சொல்லவந்த பொருளைக் காட்டிலும், அதைச் சொல்லத்தேர்ந்த முறையே இக்கதைகளின் நோக்கத்தைப் பெரித..
₹124 ₹130
இந்த ஆறு கதைகளும் ஏதோவொரு வகையில் நம் அன்றான வாழ்வின் துககங்களை, போதாமைகளை, வீழ்ச்சிகளை, சடுதியில் திரிந்து விடும் உறவுகளை மீண்டும் விசாரணை செய்ய நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. கூர்ந்து நோக்கினால் வலியின் சங்கீதத்த சுமந்து திரியும் கதாபாத்திரங்கள் கதை நெடுகிலும் பயணித்தபடி இருப்பதை எளிதில் உணர..
₹76 ₹80
கடப்பது என்பதை ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி இன்னொரு புள்ளியை அடையும் புறச்செயல் என்னும் தளத்தைத்தாண்டி, எதார்த்தத்தின் அலுப்பைக் கடப்பது, காமத்தின் அழுத்தத்தைக் கடப்பது, கனவில் நீளும் பாதைகளைக் கடப்பது, சாதி உணர்வைக் கடப்பது, அச்சத்தைக் கடப்பது எனப் பல தளங்களிலும் நிகழும் நுட்பக்கூறுகளை இக்கதைகள் பத..
₹190 ₹200